Category:
Created:
Updated:
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ கலவன் பாடசாலை மாணவர்களால் போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி ஒன்று நேற்று (27) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பமான குறித்த மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி அம்பன் கிழக்கு வரை சென்று நிறைவடைந்துள்ளது.
பாடசாலை அதிபர் திரு கண்ணதாசன் தலமையில் ஆரம்பமான குறித்த மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் "ஒழிப்போம் ஒழிப்போம் மதுவை ஒழிப்போம், தவிர்ப்போம் தவிர்ப்போம் வெற்றிலை பாக்கை தவிர்ப்போம், காப்போம் காப்போம் சமூகத்தை காப்போம்" என்ற பல்வேறு கோஷங்களை எழுப்பி மாணவர்கள் தமது விழிப்புணர்வு பேரணியை நடத்தியிருந்தனர்.
000