Ads
பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலை மாணவர்கள்
மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (24.01.2025) வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி குறித்த உண்ணாவிரதப் போராட்டமானது மாணவர்களினால் முன்னெடுக்கப்படுகின்றது.
1. விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்து
2. போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்
3. விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய்
4. மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்து - மாணவர்களிற்கு உடனடி நிவாரணம் வழங்கு
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு கிடைக்கும் வரை உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Info
Ads
Latest News
Ads