“2025 யாழ்ப்பாணம் வர்த்தக கண்காட்சி” ஆரம்பம் – பார்விட அலைமோதும் ஆயிரக்கணக்கான மக்கள்
யாழ்ப்பாண தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், நடத்தப்படும் "யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2025" இன்றையதினம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பமானது.
யாழ்ப்பாண தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், நடத்தப்படும் "யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2025" இன்றையதினம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பமானது.
குறித்த கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வை வர்த்தக துறையில் சாதித்து வேரூன்றியுள்ள பல்துறை தொழிலதிபர்கள் பலரது பிரசன்னத்துடன் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (24) வடக்கின் ஆளுநர் வேதநாயகனால் நாடா வெட்டி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந்த கண்காட்சியின் ஆரம்ப நாளன்றே ஆயிரக்கணக்கான மக்கள் பார்விட அலைமோதியிருந்தனர்.
“லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் நிறுவனம் ஆகியன யாழ்ப்பாணம் வர்த்த கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளள இந்த கண்காட்சி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய நிலையில் நாளை மற்றும் நாளை மறுதினம் 26 ஆம் திகதி இரவு 8.30 வரை மக்கள் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கண்காட்சியின் காடசி அறைகளில் உள்ளூர் உற்பத்தியாளர்களை வலுப்படுத்தும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினர் தமது உற்பத்திகளை வெளிப்படுத்தியுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.
அத்துடன் பல்லின வர்த்தக தொழில் துறைக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ள இக் கண்காட்சியில் குறிப்பாக விவசாயம், வைத்தியம், உணவு மற்றும் இயந்திரம், கட்டுமாணம், இலத்திரனியல் தொடர்பிலான பொருட்கள் சேவைகள் போன்றன கூடங்கள் உள்ளிட்ட 300 இற்கு மேற்பட்ட விற்பனையகங்கள் மிகப்பிரமாண்டமான வகையில் கட்சி படுத்தப்பட்டுள்ளன.
மேலும் உயர் கல்வி பெரும் வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் பல உயர்கல்வி வழங்கும் நிறுவனங்கள் இக் கண்காட்சியில் காட்சியறைகளை நிறுவியுள்ளமை விசேட அம்சமாகும்.
நலிவுற்றிருந்த வடக்கின் பொருளாதார முன்னேற்றத்தை மையமாக கொண்டு முன்னெடுக்கப்படும் யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சியானது 15 ஆவது முறையாக இம்முறை ஆரம்பமாகியுள்ளதுடன் வழமையை விட மிகப் பிரமாண்டமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000