யாழ் கலாசார மத்திய நிலைய பெயர் மாற்ற விவகாரம் - உண்மையை போட்டுடைத்த விந்தன்
யாழ் கலாசார மத்திய நிலையமானது ஈ.பி.டி.பி யாழ் மாநகரை ஆட்சி செய்த காலப்பகுதியில் தமிழ் மக்களின் கலாசாரத்தை பாதுகாக்கும் ஒரு குதியீடாக இந்திய அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படது.
இது அன்று யாழ் மாநகரசபையை ஆட்சி செய்த ஈ.பி.டி.பியினர் பிரேரணையாக, முயற்சியாக கொண்டுவரப்பட்ட போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் எதிர்க்கட்சியாக இருந்தும் கூட அந்த முயற்சி எமது மக்களின் கலாசாரத்தை கொண்டதாக இருந்தமையால் அதனை முழுமையாக ஆதரித்து வரவேற்றிருந்தோம்.
ஆனால் இன்று அதன் பெயர் மாற்றப்படுள்ளது வருத்தமளிக்கின்றது
இதேவேளை இது தமிழ் மக்களின் கலாசாரத்தை சுமந்து நிற்கும் ஒரு வரலாற்றுக் கூடமாகும்
இந்த பெயர் மாற்றம் இந்திய அரசின் செயற்பாடாகவோ அல்லது அரசின் செயற்பாடாகவோ இருந்தாலும் அதை மாற்றியமைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
இதைவிட அந்த நிகழ்வில் தமிழுக்கு கடை நிலை வழங்கப்பட்டமை மற்றும் அந்த சம்பவம் திரை நீக்கம் செய்யும்போது தான் அவ்விடயம் தனக்கு தெரியும் என அமைச்சர் ஒருவர் தெரிவித்தமை வேதனையான விடையம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00
.