நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு - காவல் நிலையங்களுக்கு சிறப்பு அதிரடிப் படையினரை அனுப்ப நடவடிக்கை
நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள காரணத்தால் கொழும்பு நகரத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு சிறப்பு அதிரடிப் படையினரை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளில், இரவும் பகலும் அவசரகால தடைகளை ஏற்படுத்தவும், நடமாடும் பாதுகாப்பு பணிகளை அதிகரிக்கவும், சிறப்பு அதிரடிப் படையினரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இருபது நாட்களில், ஏழு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலிருந்து பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்ததாக காவல்துரையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வெலிகம, அத்திடிய, படோவிட்ட, கல்கிஸ்ஸ, கொஹுவல மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளன.
000