சினிமா செய்திகள்
தலை குனிந்து வணங்கினார் கமல்ஹாசன்
இந்தியத் திரைத் துறையில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களை இயக்கிய இவர், தமிழ், இந்தி, மலை
நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீர
வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்ட
‘விடாமுயற்சி’ திரைப்படம் எப்போது வெளிவரும்?
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் பொங்கல் ரிலீஸ்
மகாராஜா படத்தை பாராட்டிய சீன தூதர்
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான மகாராஜா இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் கூட வெற்றிநடை போட்டு வருகி
கவியரசர் மாற்றிக் கொடுத்த பாடல் வரிகள்
நாலு பேருக்கு நன்றி என்கிற பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்'வாழும் போது வருவோர்க்கெல்லாம்வார்த்தையாலே நன்றி சொல்வோம்.ப
நடிகர் எஸ்.எஸ்.ஆர் MGR பற்றி கூறியது
1958, ஜனவரியில் பெரியார் மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களை அன்றைய பிரதமர் நேரு 'நான்சென்ஸ்' என்று சொன்னதைக் கண்டித்து, கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த உண
ஆட்டம் போட்ட கௌதம் மேனன்
கோட் படத்தை அடுத்து ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் உருவாகி வருகி
Ads
 ·   ·  2311 news
  •  ·  1 friends
  • 1 followers

அமெரிக்கா சந்திக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் – புதிய ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தெரிவிப்பு

அமெரிக்காவில் கடந்த 2024 நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர் ஜனவரி 20ஆம் திகதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி, பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. வழக்கமாக, வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் வளாகத்தின் திறந்தவெளியில்தான் பதவியேற்பு விழா நடைபெறும். அங்கு கடும் குளிர், மழை காரணமாக விழாவை கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்குக்கு ட்ரம்ப் மாற்றினார்.

இலங்கை நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு நடைபெற்ற விழாவில், அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் (78) பதவியேற்றார். அவருக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ட்ரம்பை தொடர்ந்து, துணை ஜனாதிபதியாக ஜே.டி.வான்ஸ் பதவியேற்றார். இந்த விழாவில் 600 விருந்தினர்கள் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவின் நேரடி ஒளிபரப்பை கேபிடல் ஒன் விளையாட்டு அரங்கில், ட்ரம்ப் ஆதரவாளர்கள் 20,000 பேர் பார்த்தனர்.

பதவியேற்ற பிறகு, ஜனாதிபதி ட்ரம்ப் உணர்ச்சி பொங்க உரையாற்றினார். அடுத்த 4 ஆண்டுகளில் அவர் மேற்கொள்ள உள்ள திட்டங்களை அறிவித்தார். ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறும் ஜோ பைடன், துணை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறும் கமலா ஹாரிஸ், முன்னாள் ஜனாதிபதிகள் பில் கிளின்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா ஆகியோரும் பங்கேற்றனர். அமெரிக்க தொழிலதிபர்கள் எலான் மஸ்க், ஜெப் பெசாஸ், மார்க் ஜூகர்பெர்க், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் முகேஷ் அம்பானி உட்பட பலரும் விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவில், ‘அழகான அமெரிக்கா’, ‘இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட அமெரிக்கா’ போன்ற தேசபக்தி பாடல்களை பிரபல பாடகி கேரி அண்டர்வுட், பிரபல பாடகர் லீ கிரீன் வுட் ஆகியோர் பாடினர். பதவியேற்பு விழாவை தொடர்ந்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதிகளின் விருந்தினர்களுக்கு கேபிடல் கட்டிட அரங்கில் நாடாளுமன்ற கூட்டுக்குழு சார்பில் மதிய விருந்து அளிக்கப்பட்டது. புதிய அதிபராக பதவியேற்ற பிறகு வெள்ளை மாளிகைக்கு சென்ற ட்ரம்ப், முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

ட்ரம்ப் பதவியேற்பு விழாவை முன்னிட்டு, வாஷிங்டனில் கேபிடல் கட்டிடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில், தனது ஆதரவாளர்களிடம் ட்ரம்ப் பேசியதாவது: பதவியேற்ற முதல் நாளிலேயே அமெரிக்க குடியேற்றத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், ஊடுருவலுக்கு முடிவு கட்டப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.

அமெரிக்கா சந்திக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். கடந்த 2021-ல் நடந்த கேபிடல் வளாக வன்முறை தொடர்பாக, தண்டனை விதிக்கப்பட்ட 1,500 பேருக்கு மன்னிப்பு அளிக்கப்படும். உக்ரைனிலும், மத்திய கிழக்கிலும் போரை முடிவுக்கு கொண்டு வந்து, 3-ம் உலகப் போர் நடைபெறுவதை தடுப்பேன். இவ்வாறு ட்ரம்ப் பேசினார்.

 

“அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது. அமெரிக்கா விரைவில் முன்பை விட சிறந்த, வலிமையான நாடாகவும், விதிவிலக்கானதாகவும் மாறும். தேசிய வெற்றியின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன் நான் ஜனாதிாதி பதவிக்குத் திரும்புகிறேன். நாடு முழுவதும் மாற்றத்தின் அலை வீசுகிறது. இந்த வாய்ப்பை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் முதலில், நாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நாம் நேர்மையாக சிந்திக்க வேண்டும். அவை ஏராளமாக இருந்தாலும், அமெரிக்காவில் இப்போது உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் உந்துதலால் அவை அழிக்கப்படும்.

இந்த நாளிலிருந்து, நமது நாடு மீண்டும் செழித்து வளர்ந்து உலகம் முழுவதும் மதிக்கப்படும். ஒவ்வொரு தேசமும் நம்மைப் பார்த்து பொறாமைப்பட வைப்போம். இனி நம்மை யாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம். எனது நிர்வாகத்தின் ஒவ்வொரு நாளிலும், நான் அமெரிக்காவை முதன்மையாகக் கருதுவேன். நமது இறையாண்மை மீட்டெடுக்கப்படும். நமது பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும். நீதியின் அளவுகோல்கள் மீண்டும் சமநிலைப்படுத்தப்படும். மேலும் பெருமைமிக்க, வளமான மற்றும் சுதந்திரமான ஒரு தேசத்தை உருவாக்குவதே எங்கள் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்.

இந்த தருணத்திலிருந்து, அமெரிக்காவின் வீழ்ச்சி முடிந்துவிட்டது. இன்று நமது அரசாங்கம் நம்பிக்கை நெருக்கடியை எதிர் கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக, ஒரு மோசமான மற்றும் ஊழல் நிறைந்த அமைப்பு நமது குடிமக்களிடமிருந்து அதிகாரத்தையும் செல்வத்தையும் பறித்துள்ளது. நமது சமூகத்தின் தூண்கள் உடைந்து முற்றிலும் சிதைந்துவிட்டன. உள்நாட்டில் ஒரு எளிய நெருக்கடியைக் கூட நிர்வகிக்க முடியாத ஒரு அரசாங்கம் இப்போது நம்மிடம் உள்ளது. அது நமது அற்புதமான, சட்டத்தை மதிக்கும் அமெரிக்க குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது, ஆனால் சிறைச்சாலைகள் மற்றும் மனநல காப்பகங்களிலிருந்து வரும் ஆபத்தான குற்றவாளிகளுக்கு அடைக்கலத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறது. அவர்கள் உலகம் முழுவதிலுமிருந்து சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். வெளிநாட்டு எல்லைகளைப் பாதுகாப்பதற்கு வரம்பற்ற நிதியை வழங்கிய, அதே நேரம் அமெரிக்க எல்லைகளை மிக முக்கியமாக, அதன் சொந்த மக்களைப் பாதுகாக்க மறுக்கும் ஒரு அரசாங்கம் நம்மிடம் உள்ளது.

எங்கள் போராட்டத்தைத் தடுக்க விரும்புபவர்கள் என் சுதந்திரத்தைப் பறிக்க முயன்றிருக்கிறார்கள், உண்மையில், என் உயிரையும் பறிக்க முயன்றிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, பென்சில்வேனியாவில், ஒரு கொலையாளியின் தோட்டா என் காதில் பாய்ந்தது. ஆனால் அப்போது நான் உணர்ந்தேன், இப்போது இன்னும் அதிகமாக நம்புகிறேன், என் உயிர் ஒரு காரணத்திற்காக காப்பாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற கடவுளால் நான் காப்பாற்றப்பட்டேன்” இவ்வாறு டொனால்ட் ட்ரம்ப் பேசினார்

00

  • 106
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads