Ads
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கணக்கெடுப்பு நாளைமுதல் ஆரம்பம்
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கணக்கெடுப்பு நாளைமுதல் (21) ஆரம்பமாகப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்டமாக சுமார் 8 இலட்சம் விண்ணப்பங்கள் நலன்புரி நன்மைகள் சபையினால் பெறப்பட்டுள்ளன.
அதன்படி, அந்த விண்ணப்பங்களில் இருந்து நிவாரணப் பலனைப் பெறத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில் வீடு வீடாகச் சென்று இந்தக் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதல் கட்ட நிவாரணத்திற்காக 34 இலட்சம் விண்ணப்பங்கள்நலன்புரி சபையால் பெறப்பட்டன, அதில் கிட்டத்தட்ட 18 இலட்சம் பேர் நிவாரணப் பயனாளிகளாக தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
000
Info
Ads
Latest News
Ads