Ads
உள்ளூராட்சி தேர்தல்ச ட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை திகதி அறிவிப்பதற்கு சட்டரீதியான தடை - தேர்தல்கள் ஆணைக்குழு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு சட்டரீதியான தடை நிலவுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க -
தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதத்துக்குள் திருத்தம் மேற்கொள்ளப்படும் என பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது
Info
Ads
Latest News
Ads