Ads
மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - மின்சார பாவனையாளர்கள் சங்கம் வலியுறுத்து
இலங்கை மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிகளவான இலாபத்தை ஈட்டியுள்ள இலங்கை மின்சார சபையினால் சுமார் 40 சதவீதமான சலுகைகளை மின்சார பாவனையாளர்களுக்கு வழங்க முடியும் தற்போது இலங்கை மின்சார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் நிலக்கரி மோசடியுடன் தொடர்புடையவர்.
இவ்வாறான பொருளாதார கொலையாளிகளைக் கண்டறிந்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உடனடியாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.
000
Info
Ads
Latest News
Ads