ஜனாதிபதி இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகளை நாடாளுமன்றத்துக்கு முழுமையாகத் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்து
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு முழுமையாகத் தெளிவுபடுத்தவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியா எமது அயல் நாடு. எனவே. அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் தொடர்பில் அந்நாட்டுடன் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.
இவ்வாறு இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பைப் பேணும் அதே வேளை ஏனைய நாடுகளுடனும் ஒன் றித்துப் பயணிக்க வேண்டும்.
இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொள்ளப் பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் அர சாங்கம் இன்னும் முழுமையாக அறிவிக்கவில்லை. ஒரு சில விடயங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.
எனவே, ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு முழுமையாகத் தெளிவுபடுத்தவேண்டும்.
எட்கா ஒப்பந்தத்துக்கு தேசிய மக்கள் சக்தியே கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. அது தொடர்பான பேச்சுகளைத் தொடர்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
எனவே, எட்கா தொடர்பிலான அநுர அரசாங்கத்தின் அணுகுமுறை என்ன? இது பற்றியும் தெளிவுபடுத்த வேண்டும். அதேவேளை, சர்வதேசத்துடன் இரகசிய ஒப்பந்தங்கள் தேவையில்லை என தேசிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது.
ஆகவே, அடுத்த மாதம் சீனா செல்லவுள்ள ஜனாதிபதியையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்
000