சினிமா செய்திகள்
ஜெயிலர் 2 ......வெளியான தகவல்
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர்
சூர்யா 45: இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் இன்னொரு பொறுப்பையும் ஏற்கும் ஆர் ஜே பாலாஜி
குவா மற்றும் சூர்யா 44 ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம்
பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3
மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெ
35 வயது வரை சினிமாவில் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் நடித்து வரும் தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்த தகவலை இங்கே காணலாம்.இந்த ஆண்டு தமன்னா நடிப்
கழுத்தில் சிலுவையுடன் ஸ்ருதிஹாசன்
உலக நாயகனின் மகள் ஸ்ருதிஹாசன் ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கு படமும் அவர் கைவசம் இருக்கிறது.மேலும் டகோயிட் படத்தில் இருந
பொங்கல் ரிலீசில் இருந்து பின் வாங்கிய வீரதீர சூரன்
செம கெத்தாக வீரதீர சூரன் படத்தில் மிரட்டுகிறார் விக்ரம். தங்கலான் படத்தில் கோமணத்தை கட்டிட்டு வந்த விக்ரமை இப்படி பார்த்தவுடன் ரசிகர்கள் ஆர்ப்பரித்து
சர்ச்சையில் சிக்கிய இளையராஜா
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டார்கோவிலில் நேற்று இளையராஜா அவருடைய ஆல்பமான திவ்ய பாசுரங்கள் இசைக்கப்பட்டு மாலையில் நாட்டியஞ்சலி நடைபெற
பாடகி ஸ்ரேயா கோஷலின லேட்டஸ்ட் போட்டோ ஷூட்
இந்தியாவில் பல மொழிப் பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். பல மொழிகளிலும் இவர் பாடல்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 2002 ஆம் ஆண்டு தேவ்தாஸ் எ
ராதிகா ஆப்தே பெண் குழந்தைக்கு தாயானார்
தமிழில் தோனி படத்தின் மூலம் அறிமுகமான ராதிகா ஆப்தே அதன்பின் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், ஆகிய படங்களில் நடித்தார். சூப்பர்ஸ்டார் ரஜினியின்
அந்த நடிகரின் காலில் விழ நினைத்தேன் - இளையராஜா
50 முறைக்கு மேல் பார்த்த படம்: இந்த நடிகரின் காலில் விழ நினைத்தேன்; இளையராஜா ஓபன் டாக்!இந்த நடிகரின் நடிப்பை பார்த்து பிரமித்து போய் அவரின் காலில் விழ
வீர தீர சூரன் பட ரிலீஸ் தேதியில் மாற்றம்
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 படங்களுக்கு பிறகு ஒரு ஹிட் கொடுத்த நடிகர் என்றால் அது விக்ரம். சேது படத்திற்கு முன்பு எத்தனையோ படங்களில் நடித்து அந்த
சிகிச்சைக்கு செல்லும் முன்னர் முடி காணிக்கை செய்தார் சிவராஜ் குமார்
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் கன்னடம் தாண்டி வெளிமொ
Ads
 ·   ·  2085 news
  •  ·  1 friends
  • 1 followers

உக்ரைன் - ரஷ்யா இடையே உடனடி போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் அழைப்பு

அமெரிக்க ஜனாதிபதியான தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் நேற்று (டிசம்பர் - 8) உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே “உடனடி போர்நிறுத்தத்திற்கு” அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இடையே “பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“உடனடியாக போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும். பல உயிர்கள் தேவையில்லாமல் வீணடிக்கப்படுகின்றன, பல குடும்பங்கள் அழிக்கப்படுகின்றன.

இந்த நிலை தொடர்ந்தால் மிகப் பெரியதாகவும், மோசமானதாகவும் மாறும். எனக்கு புடினை நன்கு தெரியும். இது அவர் செயல்பட வேண்டிய நேரம் இதற்காகவே உலகம் காத்திருக்கிறது” என ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுவரை கிட்டத்தட்ட 400,000 வீரர்களின் உயிர்களை பலிகொண்ட மொஸ்கோவுடனான தனது நாட்டின் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒப்பந்தத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆர்வமாக இருப்பதாக ட்ரம் மேலும் கூறினார்.

“ஜெலென்ஸ்கியும், உக்ரைனும் ஒரு ஒப்பந்தம் செய்து போரை நிறுத்த விரும்புகிறார்கள். அவர்கள் 400,000 வீரர்களையும் இன்னும் பல பொதுமக்களையும் அபத்தமான முறையில் இழந்துள்ளனர்” என்று எழுதியுள்ளார்.

பாரிஸில் உள்ள நோட்ரே - டேம் கதீட்ரல் மீண்டும் திறக்கப்படுவதையொட்டி, ட்ரம்ப் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ட்ரம்பின் அறிக்கை வந்துள்ளது.

சனிக்கிழமை இடம்பெற்ற இரு நாட்டின் தலைவர்கள் உடனான சந்திப்பு மிகவும் பயனுள்ள ஒன்று என்றும் மூவரும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார்.

இது ட்ரம்ப்புடன் ஜெலென்ஸ்கியின் முதல் நேருக்கு நேர் சந்திப்பு என்பதுடன், நவம்பர் ஐந்தாம் திகதி நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அமெரிக்க ஜனாதிபதியின் முதல் சர்வதேச விஜயம் ஆகும்.

000

  • 379
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads