தாம் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் தலைவரை கைது செய்யுமாறு தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் உத்தரவு
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் தாம் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் தலைவர் ஹன் டொங்-ஹுனை கைது செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.
இது தவிர பிரதான எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மூன்று எதிர்க்கட்சி உயர்மட்ட தலைவர்களையும் கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவரின் இந்த செயல்பாட்டின் கீழ் அவருக்கு எதிராக செயல்படுபவர்களின் நடவடிக்கைகளை முடக்கத் தீர்மானித்துள்ளதாகப் புலனாய்வு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று முழுவதும் அரசியல் கட்சிகள் அவசர கூட்டத்தினை மேற்கொண்டு, நாளை ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வர திட்டமிட்டிருந்தன. இந்த நிலையில், ஜனாதிபதி இந்த கைது நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருந்த உத்தேச நம்பிக்கை இல்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்கு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில் உள்ளன.
300 ஆசனங்களைக் கொண்ட தென்கொரிய நாடாளுமன்றத்தில் தற்போது எதிர்க்கட்சிகளுக்குப் பெரும்பான்மை பலம் உள்ளதானால் குறித்த பிரேரணை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தன.
ஜனாதிபதியின் கட்சியைச் சேர்ந்தவர்களும் அவருக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்ததனை அடுத்தே அவர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது
000