Category:
Created:
Updated:
வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோவிற்கு வடக்கே 260 மைல் தொலைவில் உள்ள கலிபோர்னியாவின் ஃபெர்ண்டேல் நகருக்கு மிக அருகில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வினால் உயிரிழப்புகள் அல்லது பாரியளவிலான சேதம் ஏற்படாத போதிலும், குடியிருப்புகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய ரீதியில் இந்த ஆண்டு தாக்கிய 7.0 ரிக்டர் அளவிலான ஒன்பதாவது நில அதிர்வு இதுவாகுமென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து வடக்கு கலிபோர்னியா மற்றும் தெற்கு ஓரிகான் ஆகிய இரு நாடுகளின் கரையோரங்களில் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் இரத்து செய்யப்பட்டுள்ளது.
000