டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை
இந்தியாவின் டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூன்று பேரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதில், திருட்டு அல்லது சந்தேக நபர்கள் வீட்டினுள் நுழைந்ததற்கான எந்த தடயமும் காணப்படவில்லை.
எனினும் மகன் அர்ஜுனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவருடைய கையில் புதிதாகக் காயம் காணப்பட்டதுடன், கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
அர்ஜுனுக்கும் அவருடைய தந்தை மற்றும் குடும்பத்தினருடனான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், இவ்வாறு கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அர்ஜுனின் தந்தை முன்னாள் இராணுவ அதிகாரியாவார். அவரது இராணுவ கத்தியைப் பயன்படுத்தி இந்த சம்பவத்தில் அர்ஜுன் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற தினம், நடைப்பயிற்சிக்காக வெளியே சென்றிருந்ததாக காவல்துறை மற்றும் அயலவர்களிடம் அர்ஜுன் கூறியிருக்கிறார்.
எனினும், காவல்துறையினரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
000