💉 Dr Archchuna வரலாற்று வெற்றி
சாவகச்சேரி வைத்தியசாலை ஊழலுக்கு எதிரான போராட்டம் ,அதனோடு இணைந்த மக்கள் ஆதரவு , பதவி பறிப்பு, போற்றிய மக்களில் ஒரு சில குழுக்களே தூற்றவும் செய்தனர், நம்பிய அரசியல் தலமைகள் ஏமாற்றினர, பல வழக்குகள் , பல நாட்கள் சிறைவாசம் இருந்த மருத்துவர் அர்ச்சுனா தேர்தல் வேட்புமனு திகதிக்கு இரு தினம் முன்னர் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்து யாழ் மாவட்டத்தில் பல சுயேட்சைக்குழுக்கள் கட்சிகள் நடுவே தானும் போட்டியிட்டு, இன்று அதுவும் யாழின் பல மூத்த அரசியல்வாதிகள் மற்றும் முதன்மை வேட்பாளர் உள்ளிட்ட 3 வேட்பாளர்கள் கொண்ட சாவகச்சேரி தொகுதியிலே அதிகூடிய வாக்கினை ஒரு சுயேட்சைக்குழுவாக முதன்மை பெற்று 24 வருடங்களுக்கு பிறகு சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக யாழ் மக்களின் 20497 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
சில அவமானங்களும் தேவையற்ற வீண் விமர்சனங்களும் கூட ஆத்மார்த்த வெற்றியை கொடுக்கவல்லது.!