டொனால் ட்ரம்ப் வெற்றியானது அங்குள்ள தவறான கொள்கைகளை மீள் பரிசீலனை செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் - ஈரான்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால் ட்ரம்ப் பெற்ற வெற்றியானது, அங்குள்ள தவறான கொள்கைகளை மீள் பரிசீலனை செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும் என ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றம் நிலவிவரும் நிலையில், ஈரானின் வெளிவிவகாரச் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் அமெரிக்காவின் வெவ்வேறு அரசாங்கங்களின் கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகள் தங்களுக்கு மிகவும் கசப்பான அனுபவங்களை ஏற்படுத்தியதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதன்படி, டொனால்ட் ட்ரம்பின் வெற்றியானது முந்தைய தவறான கொள்கைகளை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பாகும் என ஈரானின் வெளிவிவகார செயலாளர் ஸ்மாயில் பகாய் (Esmaeil Baghaei) தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் குடியேறுவதற்கு முன்னதாக தமது உயர்மட்ட அணியைத் தெரிவு செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
000