Category:
Created:
Updated:
தேசிய-பாதுகாப்பு அபாயங்களை மேற்கோள் காட்டி, சீனாவுக்குச் சொந்தமான டிக்டோக் (TikTok) இன் அலுவலகங்களை நாட்டில் மூடுவதற்கு கனடா உத்தரவிட்டது. எனினும், கனேடியர்கள் குறுகிய வீடியோ செயலிக்கான அணுகல் அல்லது பதிவேற்றம் மேற்கொள்வதற்கான செயல்களுக்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லை. கனடாவின் பாதுகாப்பு, உளவுத்துறை சமூகம், ஆய்வுகளின் போது சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.