Ads
கார் வாங்க பிறக்கப்போகும் குழந்தையை விற்ற தாய்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 21 வயது ஜூனிபர் பிரைசன் என்ற பெண், தனக்கு பிறக்க போகும் ஆண் குழந்தையை தத்தெடுக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என நீதிமன்ற ஆவணங்களின்படி பதிவு செய்திருந்தார்.
இது குறித்து அவர் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், குழந்தையை கொடுப்பதற்காக அதிக பணம் கொடுக்க வேண்டும் என பேரம் பேசியதாகவும் தெரிகிறது.
ஒரு சில தம்பதிகள் பணம் கேட்டவுடன் பின் வாங்கியதாக கூறப்படும் நிலையில், குழந்தையை விற்று கிடைக்கும் பணத்தில் புதிய கார் வாங்க அவர் திட்டமிட்டுள்ளார்.
வில்லியம்சன் என்பவர் அவருடைய குழந்தையை வாங்கியதாக பேஸ்புக்கில் பகிர்ந்ததால், பலரும் பேஸ்புக் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாதுகாப்பு சேவை மையத்துக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், குழந்தையை விற்பனை செய்த பிரைசன் கைது செய்யப்பட்டார்.
Info
Ads
Latest News
Ads