பொதுத் தேர்தல் - செயற்பாடுகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைத் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தது தேர்தல்கள் ஆணைக்குழு
பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைத் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்வைத்த சமர்ப்பணங்களுக்கமைய இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடத்துவது அரசியல் அமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி பொது அமைப்பு ஒன்றினால் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்கு முரணானது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த மனு எதிர்வரும் 4 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் தேர்தல்கள் ஆணைக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில், அதற்கமைவாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அந்தத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
000