பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் ஒக்ரோபர் 27 முதல் நவம்பர் 03 வரை விநியோகம் - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்
பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக இரண்டு முக்கிய தினங்களை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கிணங்க எதிர்வரும் ஒக்டோபர் (27) மற்றும் நவம்பர் (03) இவை விநியோகிக்கப்படவுள்ளன. அதேவேளை, உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் சனிக்கிழமை தபாலில் இடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் விநியோக நடவடிக்கைகள் நேற்று நாட்டிலுள்ள மாவட்ட செயலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இம்முறை தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 759,210 ஆகும். இவற்றில் 21,160 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 738,050 வாக்காளர்கள் தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். இது கடந்த ஜனாதிபதித் தேர்தலோடு ஒப்பிடுகையில் சற்று அதிகரிப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆர் .எம். ஏ .எல். ரட்நாயக்க அது தொடர்பில் தெரிவிக்கையில்; இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தனது செலவினம் தொடர்பான அறிக்கைகளை கைவசம் வைத்திருப்பது அவசியமென அறிவுறுத்தியுள்ளார்.
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்புக்கு இணங்க அனைத்து வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைக் குழுக்களும் அரசியல் கட்சிகளும் அதனைப் பின்பற்றி செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு செயற்படாத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்
000