Ads
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை
தற்போதைய நிலவரத்துக்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் விளக்கமளித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தற்போதைய மழையுடனான காலநிலையையடுத்து டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், டெங்கு நோய் அதிகளவில் பதிவாகும் பகுதிகளில் தற்போது நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
எனவே, இந்த நிலைமை தொடருமாயின் வருட இறுதியில் நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரமடையக்கூடும்.
எனவே அதனைத் தவிர்த்துக் கொள்வதற்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரியுள்ளார்.
00
Info
Ads
Latest News
Ads