Ads
நாட்டின் அனைத்து ஊடக நிறுவனங்களும் தேர்தல் சட்டங்களை மதித்து பக்கச்சார்பற்ற வகையில் செயற்பட வேண்டும் - தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்து
நாட்டின் அனைத்து ஊடக நிறுவனங்களும் தேர்தல் சட்டங்களை மதித்து பக்கச்சார்பற்ற வகையில் செயற்பட வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
சில ஊடக நிறுவனங்கள் சில வேட்பாளர்களுக்கு சார்பான வகையில் செயற்படுவதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறான ஊடக நிறுவனங்கள் தொடர்பில் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு விதி மீறல்களில் ஈடுபடும் ஊடக நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் ஊடக அறிக்கைகள் வழங்கப்படாது எனவும் அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
Info
Ads
Latest News
Ads