சினிமா செய்திகள்
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
Ads
 ·   ·  2863 news
  •  ·  1 friends
  • 2 followers

பொது வேட்பாளர் புலுடாவும்,... மக்களுடன் பேசும் மனச்சாட்சியும்,

.............

நாங்கள் ஒற்றுமையின் பெயரால் அழுகிய நாரில் ஒன்றாக கோர்க்கப்பட்ட உதிரிப்பூக்கள்.

இந்த பூக்கள் மீது புழுக்கள் நெழிவதாக நீங்கள் நினைக்கலாம்.

பொது வேட்பாளரை அறிவித்துள்ளோம். நாங்கள் புனிதர்கள் அல்ல போலிகள்,..

அப்படியும் நீங்கள் நினைக்கலாம்,.. அதுவே உண்மை, ஆகவேதான் எங்கள் மனசாட்சி

எம்மை மீறியே கட்டவிழ்த்து வந்து மக்களாகிய உங்களோடு பேசுகிறது,..

எங்கள் மனக்கதவுகளை நாங்கள் பூட்டியே வைத்துள்ளோம்.

உங்களால் திறந்து பார்க்கவே முடியாத

எங்கள் மனக்கதவுகளில் எழுதப்பட்டிருக்கும் அழகிய வாசகங்கள் உங்களுக்கு தெரியும்.

நாங்கள் உச்சரிக்கும் அழகிய கோசங்களை அழுகிய கோசங்கள் எனவும் நினைப்பீர்கள்,

அது எங்கள் தவறு மட்டுமல்ல, உங்களை நாங்கள் பல முறை ஏமாற்றியும்

அடிக்கடி எங்களுக்கு ஆணை வழங்கி ஏமாந்த உங்கள் தவறும் கூட.

உங்கள் முன் நாங்கள் உருட்டி விட்டிருக்கும் எங்கள் பொது வேட்பாளர்

உங்களுக்கு என்ன சொன்னார்?...

தமிழரின் ஒற்றுமையை உலகுக்கு காட்ட ஆணை தாருங்கள்.

உலகோடு நாங்கள் பேச செல்லும் போது ஒரு குரலோடு வாருங்கள் என்கிறார்கள்.

ஆகவே,.. ஒரு குரலின் பேசும் பலம் எமக்கு தாருங்கள்,.

77 இல் பதினெட்டு ஆசனங்கள் தந்து ஆணை தந்தீர்கள்.

2004 இல் இருபத்தி இரண்டு ஆசனங்கள் தந்து ஆணை தந்தீர்கள்.

அது போல் இன்றும் தாருங்கள்,..

ரணில் புலிகளை பிரித்தார்,. அவருக்கு வாக்களிக்க வேண்டாம்.

ஜே வி பி வடக்கு கிழக்கை பிரித்தது,. அவருக்கும் வாக்களிக்க வேண்டாம்,.

கடந்த நல்லாட்சியில் சஜித் பிரேமதாச ஆயிரம் விகாரைகள் வடக்கு கிழக்கில் நிர்மாணித்தார்.

நாமல் தான் பதின்மூன்ற தரமாட்டேன் என்றார். அவர்களுக்கும் வாக்களிக்க வேண்டாம்.

சரி நாங்கள் விடயத்திற்கு வருவோம்.,...

எழுபத்தி ஏழில் எங்களுக்கு பதினெட்டு ஆசனங்கள் வழங்கி

ஆணை தந்தீர்கள்.

அந்த ஆணையை வைத்து நாம், எதை சாதித்தோம் என்று கேட்பீர்கள்.

எங்கள் மனசாட்சி அதை ஒப்புக்கொள்கிறது. ஆனால் வெளியே அதை பேசோம்.

சிங்க மறத்தமிழ் வீரர் எங்கள்

செந்தமிழ் தோழர் தம் தோள் மிசை ஆணை

சங்கு முழங்கி உரைப்போம் நாளை

சண்டைக்களத்திலே சாகவந்தாலும்

சங்கு முழங்கி உரைப்போம்

மங்கிக்கிடக்கும் தமிழை மீண்டும்

மாளிகை ஏற்றி வணங்கியே சாவோம்,..

எங்கள் பொது வேட்பாளர் இன்று ஊதும் சங்கு

நீங்கள் எழுபத்தி ஏழில் வழங்கிய ஆணையின் போதே ஊதி முடிந்தது,..

என்னாச்சு அந்த ஆணைக்கு?..

வீர முழக்கமிட்டு ஆணை வழங்கிய மக்களாகிய உங்களை உசுப்பேற்றி

வீதிக்கு அழைத்து நட்டாற்றில் கைவிட்டு நாம் மட்டும் தப்பித்து ஓடினோம்,..

தனி நாடு கேட்ட நாங்கள் குடும்பங்களோடு தமிழ் நாட்டில் தஞ்சமடைந்தோம்.

தனி வீடுகள் கேட்டு வாங்கி சொகுசாக வாழ்ந்தோம்,.

ஆணை தந்த உங்களுக்கு நாங்கள் தந்தது தனி நாடோ தனி வீடோ அல்ல

சுடு காடு,.;.

நாங்கள் உங்கள் முன் உருட்டி விட்ட பொது வேட்பாளார்

அடுத்து என்ன சொன்னார்?..

2004 இல் இன்னொரு ஆணையை மக்களாகிய நீங்கள் வழங்கியதாக சொன்னார்.

22 நாடாளுமன்ற உறுப்பினர்களை தந்தீர்கள் என்றார்,..

அது உண்மையாகவே மக்கள் ஆணையா என்பதை சிறீ வாத்தி எம்பியிடம் கேளுங்கள்.

தானே எழுபத்தைந்து கள்ள வாக்குகள் போட்டதாக அவரே பொது வெளியில்

போட்டுடைத்து விட்டார்,..

அடிப்படையில் அது ஒரு மோசடி,. ஆயினும் உலகின் பார்வைக்கு அது மக்கள் ஆணையே.

அதை வைத்து நாங்கள் எதை சாதித்தோம் என கேட்பீர்கள்,.,.

முள்ளி வாய்க்கால் வரை மக்களாகிய நீங்கள் அழிவுக்களம் நோக்கி இழுத்து செல்லப்பட்டீர்கள்,..

ஒற்றுமையின் பலத்தை காட்டி சர்வதேசத்தை அழைத்தோம்,..

ஒரு முறையாவது நாங்கள் நம்பியிருந்த சர்வதேசம் திரும்பியே பார்க்கவில்லை.

இருபத்தி இரண்டு ஆசனங்கள் மூலம் நீங்கள் தந்த ஆணையை வைத்து

ஒரு மனித உயிரை கூட எங்களால் காப்பாற்ற முடியவில்லையே,..

அந்த ஆணையை வைத்து அரசியல் தீர்வை பெற்றுத்தந்தோமா?... அதுவும் இல்லை,..

நீங்கள் வழங்கிய ஆணை அழிவுகளுக்கு பின்னராவது உங்கள் அவலம் தீர்க்க உதவியதா?.. இல்லையே,.,.

ரணில் புலிகளை இரண்டாக பிரித்தவர், அவருக்கு வாக்களிக்க வேண்டாம்,..

இப்படி நாம் உங்ளிடம் கூறும் போது நீங்கள் அட பாவிகளே என எம்மை திட்டித்தீர்ப்பது புரிகிறது,..

நால்லாட்சி என்று நாமே மார் தட்டி இதே ரணில் ஐயாவோடு

ஐந்தாண்டுகள் தேன்நிலவு கண்ட போது அவர் புலிகளை பிரித்த கதையை

நாம் மறந்துதான் சேர்ந்திருந்தோமா என நீங்கள் எமை கேலி செய்வதும் புரிகிறது,..

வன்முறை வழியில் நிற்கும் ஒரு போராட்ட அமைப்பை எங்கும் எக்காலத்திலும்

எந்த ஆட்சியாளர்களும் நசுக்காமல் ஒடிக்காமல் உடைக்காமல் தோளில் தூக்கியா

கொண்டாடுவார்கள்?...

நாமல்லவா அதற்கு இடம் கொடுக்க மறுத்து விழிப்புடன் இருந்திருக்க வேண்டும்

என நீங்கள் எமக்கு புகட்டும் புத்திகளும் எம் காதுகளில் விழுகிறது,..

தீர்வு தர தயாராக இருந்த ரணில் ஐயாவிடம் நாம் தீர்வை பெறாமல் எதை பெற்றோம்?..

அது மக்களாகிய உங்களுக்கே வெளிச்சம்,..

ஆற்றல், அனுபவம், ஆளுமை, இவை மூன்றுடன் சேர்ந்து பிரச்னையை தீர்க்க வல்ல

விருப்பமும் எம்மிடம் இருந்திருந்தால்,..

வெறும் சலுகைக்கு விலை போகாத உறுதி எம்மிடம் இருந்திருந்தால்

வரலாற்றில் என்றும் கிடைக்காத தில்லு முல்லு ஆணையை வைத்தே

தமிழராகிய உங்கள் தலைவிதியை மாற்றியே இருப்போம்,..

ஆகவேதான் 2015 இல் நாங்கள் மார் தட்டிய நல்லாட்சி அமைந்த போது

மக்களாகிய நீங்கள் வழங்கிய ஆணை குறித்து எமது பொது வேட்பாளர்

எதுவும் பேசாமல் மறைத்துவிட்டார் போலும்

சஜித் பிரேமதாசா வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகள் திட்டத்தை கொண்டுவந்தவர்

அவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என எமது பொது வேட்பாளர் உங்களுக்கு கூறிய போது

இது நல்ல பகிடி என நீங்கள் கெக்கட்டம் விட்டு சிரித்திருப்பீர்கள்,..

நாமே முண்டு கொடுத்து எமது ஆட்சி என்று நாமே மார் தட்டி காத்து வந்த

ஆட்சியில் அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசாவே ஆயிரம் விகாரைகள் திட்டத்தை

கொண்டுவந்தவர் என்பதை நாம் மறப்பினும் மக்களாகிய நீங்கள் மறப்பீரோ?..

நாம் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த போது ஜே வி பி

வடக்கு கிழக்கை பிரித்தது என எமது பொது வேட்பாளர் கேள்வியையும் சொல்லி

பதிலையும் சொல்லி விட்டார்.

எத்தனை பெரிய அரசியல் பலத்தோடு நாம் இருந்த போதுதானே அவர்கள்

வடக்கு கிழக்கை பிரித்தனர்,.. சர்வ தேசத்தை அழைத்து பிரித்ததை இணைக்க வைத்தோமா?..

இல்லை,.. சட்டம் படித்த எங்கள் வக்கீல் மேதாவிகளை வைத்து வாதிட்டு வெல்ல

வழக்கு போட்டோமா?.. இல்லையே,..

நாம் தும்புத்தடியால் கூட தொட்டும் பார்க்கோம் என தட்டிக்களித்த தீர்வல்லவா

பதின்மூன்றாம் திருத்தம்,.

அதற்குத்தானே நாமல் ராஜபக்ச அதிகாரங்களை தரமாட்டேன் என்கிறார்,.

அவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என எம் பொது வேட்பாளர் புரளி கிளப்பியிருக்கிறார்.

அதெற்கென்ன யாரும் சொல்லி விட்டு போகட்டுமே,.. பிரித்த வடக்கு மாகாணத்தில்

ஐந்தில் நான்கு பெரும்பான்மையுடன் யாருக்கும் வழங்காத ஆணையை மக்களாகிய

உங்களை உசுப்பேற்றி அபகரித்தோம்.

கிடைத்த அதிகாரங்களை வைத்தாவது நடத்திக்காட்டும் திறன் எமக்கு இருந்திருந்தால்.

வடக்கு நோக்கி வந்த நிதிகள் யாவும் திரும்பியும் போயிருக்காது,. நியதிச்சட்டன்களை

உருவாக்கும் வல்லமையும் எமக்கு இருந்திருக்கும்.

ஊழல் விசாரணை என்று உட்சண்டை மோதல் எமக்குள் நடந்து ஒழிந்ததே தவிர

மக்களின் ஆணைக்கு என்னதான் நடந்தது?..

ஆகவே மக்களே!,.. எங்கள் மனச்சாட்சியே உங்களுடன் பேசியிருக்கிறது,..

உதடுகள் திறந்து நாங்கள் பேச எங்கள் நா கூசுகிறது,..

எல்லாக்காலங்களிலும் நாமே எறிச்சறுக்கிய குதிரையில் மறுபடியும் எறிச்சறுக்க வருமாறு

உங்களையும் அழைக்கின்றோம்,...

இதுவரை காலமும் மக்களாகிய நீங்கள் மாற்றத்தை விரும்பி

எமக்கு வழகிய ஆணைக்கு

நாங்கள் தந்த பரிசளிப்பு ஏமாற்றம் மட்டுமல்ல,..

துன்பமும் துயர்களும் அழிவுகளும் அவலங்களுமே,..

இப்படிக்கு

பொது வேட்பாளர் குழுவின் மனச்சாட்சி சார்பில்

சூரிய புத்திரன்,..

  • 1204
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads