கர்ப்பிணி தாய்மார்களுக்கு கருச்சிதைவு அதிகரிக்கும் நிலை - வைத்திய நிபுணர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ எச்சரிக்கை
இலங்கையிலுள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு கருச்சிதைவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் டாக்டர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடும்ப சுகாதாரப் பணியகத்தின் சமீபத்திய தரவு அறிக்கைகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கர்ப்பிணித் தாய்மார்களிடையே இரும்புச்சத்து குறைபாடு மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு காரணமாக கர்ப்பிணிப் பெண்களின் கருச்சிதைவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போது, நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் எடை குறைவாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
கிராம மட்டத்தில் இந்த நிலைமை அதிகளவில் எட்டியுள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்
எனவே சம்பந்தப்பட்ட விடயங்களை கவனத்தில்கொண்டு தாய் மற்றும் சேய் ஊட்டச் சத்துத் திட்டங்களை கிராம மட்டத்திலிருந்து நடைமுறைப்படுத்த அதிகாரிகள் உழைக்க வேண்டும் எனவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.
000