வெற்றிடமாகவுள்ள பாடசாலை காவலாளிகள் பதவிக்கு விரைவில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ள நடவடிக்கை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த
பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தற்போது வெற்றிடமாகவுள்ள பாடசாலை காவலாளிகள் (security guards)பதவிக்கு விரைவில் ஆட்சேர்ப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த வகையில் பாடசாலைகளின் கல்வி சாரா ஊழியர்கள் தரத்தில் இந்த காவலாளிகள் நியமனங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் நிலவும் கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் காவலாளிகளுக்கான தட்டுப்பாடு தொடர்பில் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப் பெரும நேற்று சபையில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
“பாடசாலை கல்வி சாரா ஊழியர்களை உதவியாளர் சேவையாக பெயரிட்டுள்ளதுடன் பாடசாலைக் கல்வி சாரா ஊழியர்களுக்கான தேசிய கொள்கை ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது“.
000