கட்சியிலிருந்து விலகிச் சென்றுள்ளவர்களை மீண்டும் வந்து இணைந்து கொள்ளமாறு நாமல் அழைப்பு
கட்சியிலிருந்து விலகிச் சென்றுள்ளவர்களை மீண்டும் வந்து இணைந்து கொள்ளமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என அறிவிக்கப்பட்டமையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
‘சவால் மிகுந்த தருணத்தில் என்மீது நம்பிக்கை வைத்து ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்தமைக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். சவால்களை எதிர்கொள்ள தயாராகவே உள்ளேன். எம்முடைய கட்சியிலிருந்து ரணிலுக்கு ஆதரவளிக்கச் சென்றுள்ளவர்களுக்கு மீண்டும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக அழைப்பு விடுக்க விரும்புகின்றேன். குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு முன்னோக்கி பயணிப்பதே எம்முடைய நோக்கமாகவுள்ளது. நிச்சயமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிகொள்ளும். என்னுடைய வெற்றி கட்சியின் வெற்றி. கட்சியின் வெற்றி நாட்டின் வெற்றியாகும். மொட்டுக்கட்சியினர் மற்றும் நாட்டு மக்களை வெற்றியடையச் செய்வதே எம்முடைய நோக்கமாகும். நாட்டின் ஒருங்கிணைப்பை பாதுகாத்துக்கொண்டு நாட்டை வெற்றியடையச் செய்யவேண்டும் என்பதே எம்முடைய எதிர்பார்ப்பாகும்.’ என குறித்த ஊடக சந்திப்பில் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.