பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் - அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமை ஆலோசகராக இருப்பாரென அந்த நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவிப்பு
பங்களாதேஷில் அமைக்கப்படவுள்ள இடைக்கால அரசாங்கத்தில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ், தலைமை ஆலோசகராக இருப்பாரென அந்த நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் சஹாப்தீன், இராணுவத் தலைவர்கள் மற்றும் அங்குத் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ள பல்கலைக்கழக மாணவர் குழுக்களின் தலைவர்கள் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியிலிருந்து விலகி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது.
அங்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பல வாரங்களாக முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்களை அடுத்து அந்த நாட்டு பிரதமர் பதவி விலகினார்.
பின்னர் பங்களாதேஷில் உருவான இராணுவ அரசாங்கத்தையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் ஏற்க மறுத்துள்ளனர்.
அத்துடன் புதிய அரசாங்கத்தை நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் வழிநடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இவ்வாறான பின்னணியில் புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த விடயத்தை நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் ஏற்றுக் கொண்டுள்ளார்.
தற்போது பாரிஸில் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முகம்மது யூனுஸ் விரைவில் பங்களாதேஷிற்கு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
00