IMF ஒப்பந்தங்களை மாற்றினால் மீண்டும் வரிசை யுகம் எற்படும் - ஜனாதிபதி ரணில் எச்சரிக்கை
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் அரசாங்கம் ஆரம்பித்த வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்லாவிட்டால் நாடு மீண்டும் வரிசை யுகத்தை எதிர்நோக்க நேரிடுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வான்றில் கலந்துகொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
மத்திய அரசாங்கத்தின் சுமையை குறைத்து மாகாணங்களுக்கு அபிவிருத்தியை பகிர்ந்தளிக்கும் வகையில் மாகாண சபைகளை பலப்படுத்துவதே எமது நோக்கமாகும்.
நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டும்.
இந்த ஒப்பந்தங்களை மாற்ற முயற்சிப்பதன் மூலம் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நிதியுதவியை இழக்க நேரிடும்.
சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தங்களை மாற்றினால் பாதகமான விளைவுகள் ஏற்படும். 2035ஆம் ஆண்டுக்குள் இலங்கையை ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக மாற்றும் நோக்கிலேயே பொருளாதார பரிமாற்றச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கத்தின் சுமையை குறைத்து மாகாணங்களுக்கு அபிவிருத்தியை பகிர்ந்தளிக்கும் வகையில் மாகாண சபைகளை பலப்படுத்துவதே எமது நோக்கமாகும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000