Ads
லெபனானில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் அவசர கோரிக்கை
லெபனானில் வசிக்கும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அந்நாட்டுத் தூதரகங்கள் அறிவித்துள்ளன.
மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முன்பதாக அண்மையில், இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹெஸ்புல்லா கமாண்டர் பாத் சுக்கிர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமீனீ உத்தரவிட்டதால் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்தியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளும், தங்கள் நாட்டினரை லெபனானில் இருந்து உடனடியாக வெளியேறும்படி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Info
Ads
Latest News
Ads