Ads
இலங்கைக்கு விரைந்த இந்திய நீர்மூழ்கி கப்பல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Shalki’ நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த நீர்மூழ்கி கப்பல் நாட்டின் பல கடற்பகுதிகளுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நீர்மூழ்கி கப்பல் செயற்பாட்டு பணிகள் தொடர்பில் இலங்கை கடற்படையினரை தெளிவுபடுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை 64.4 மீற்றர் நீளம் கொண்ட INS Shalki கப்பலின் கட்டளையிடும் அதிகாரியான கமான்டர் Rahul Patnaik மற்றும் மேற்கு கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க ஆகியோருக்கிடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து நாளை INS Shalki கப்பல் மீண்டும் இந்தியா நோக்கி செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Info
Ads
Latest News
Ads