குடாநாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது சுத்தமான குடிநீர் – தாளையடி குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி ரணில்
வடமாராச்சி தாளையடி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்துக்கு உவர்நீரை நன்நீராக்கும் குடிநீர் செயற்றிட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
இன்று முற்பகல் 10 மணியளவில் நடைபேற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீர்பாபாசன அமைச்சர் ஜிவன் தொண்டமான் மற்றும் துறைசார்’ அதிகாரிகளின் பிரசன்னத்துடன் குறித்த திட்டம் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் பிரான்ஸ் நாட்டுக்குரிய சுவிஸ் அமைப்பின் செயற்றிட்டமான இந்த செயற்றிட்டத்தின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தனன
ரூபா 14,500 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த செயற்றிட்டத்தின் ஊடாக நாளொன்றுக்கு 24,000,000 (இரண்டு கோடியே நாற்பது இலட்சம்) லீற்றர் வரையான குடிநீர் உற்பத்தி செய்யப்படுவதுடன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் கிராமங்களுக்கு இந்த குடிநீர் பகிர்ந்தளிப்பதற்குத் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்றிட்டம் இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், முதற் கட்டமாக இன்று மீசாலை வரையான கிராமங்களுக்கு குடிநீர் பகிர்ந்தளிப்பதற்குத் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இதேவேளை வடக்கு மாகாணத்தில் தற்போது காணப்படும் 9.6 சதவீதமான பாதுகாப்பான நீர் குழாய் அமைப்பை 2025 ஆம் ஆண்டளவில் 56.9 சதவீதமாக உயர்த்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை திட்டமிட்டுள்ளது.
இதேவேளை யாழ் குடாநாட்டில் குறிப்பாக தீவுப் பகுதியில் காணப்படும் மக்களின் நீர் பற்றாக் குறைக்கு முன்னுரிமை வழங்கி சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தியமைக்கு நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கும் நன்றியை தெரிவித்ததுடன் இத்திட்டங்களானது வடக்கு மக்களுக்கு கிடைக்கப் பெற்ற வரப்பிரசாதம் என்பதும் குறிப்பிடத்தக்கது