சினிமா செய்திகள்
கருடன் திரைப்படத்தின் 50-வது நாள் - நடிகர் சூரி ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் க
டிஎன்ஏ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது
பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டி வீரன், ஈட்டி போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர்களை கொண்டவர் நடிகர் அதர்வா. கடந்த ஆண
அமரன் திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை பெற்ற நிறுவனம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவன ட்தயாரிப்பில் உருவாகி வரு
தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருக
கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல்
விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி,
நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதி
உலாஜ் படத்தில் மும்முரமாக இருந்த நடிகை ஜான்வி கபூர் கடுமையான உணவு விஷம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை அவரது தந்தையும்
மறக்க முடியாத நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன்
32000 ரூபாய் செலவில் ஒரு திரைப்படம். கதாநாயகனுக்கு சம்பளம் 140 ரூபாய்.1940 காலகட்டங்களில் திரைப்படத்தின் ஹீரோ என்றால், நல்ல பலசாலியாக, வாளெடுத்து சண்ட
பாடகி ஜானகியின் சாதனைகள்...
60 - வருடங்கள்17 - மொழிகள்48000 - பாடல்கள்4 - தேசிய விருதுகள்32 - மாநில விருதுகள்7 - தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது10 - ஆந்திர மாநில அரசின்
எம் ஆர் ராதா அவர்களின் நாடக கம்பெனியில் ஆறு வருடங்கள் வேலை செய்தேன்ஒரு முறை வீட்டிற்கு வந்து போது என்னை பெற்ற தாயே நடிக்க போன மூஞ்சியை பாரு என்று என்ன
நாகேஷ் என்னும் அற்புத நகைச்சுவை நடிகர்
🌹இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு, ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்
 மிக எளிமையானவர் நடிகர் நாகேஷ்
திரு.நாகேஷ் அவர்கள்.மைலாப்பூர் கபாலி கோவில் தெப்பக்குளத்தின் படிகட்டுகளில் உட்கார்ந்துகொண்டு வற்றிப் போன தெப்பக் குளத்தைப் பார்த்து “அந்தப் பழைய நாள்க
இந்தியன் 2' படத்திற்கு சிறப்பு காட்சிக்கு ஒரு நாள் மட்டும் அனுமதி
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் நாளை ஒரு நாள் மற்றும் இந்த படத்திற்கு 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு
Ads
 ·   ·  831 news
  •  ·  0 friends
  • 1 followers

நீதிபதிகள் சிலரின் முறையற்ற செயற்பாடுகளால் நீதிக்கே இழுக்கு - அமைச்சர் விஜேதாச ராஜபக்ச சபையில் சிறப்புரிமை முன்வைப்பு

நீதிபதிகள் சிலரது முறையற்ற செயற்பாடுகளால் கௌரவமான பல நீதிபதிகளின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், நீதிச்சேவை கட்டமைப்பு பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளதாகவும் நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சபையில் தாம், ஆற்றிய உரை தொடர்பில் ஊடக அறிக்கைகளை வெளியிட்டுள்ள இரு நீதிபதிகளை அவசியமானால் நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு அழைத்து விசாரிக்க முடியும் என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை மீறல் பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலையே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சபையில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் -

நீதிச்சேவை கட்டமைப்பு தொடர்பில் சபையில் நான் ஆற்றிய உரை தற்போது பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது. எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். எனினும், நான் கேள்விகளை முன்வைப்பதற்கு முன்னர் நீதிச்சேவை ஆணைக்குழு அதற்குப் பதிலளித்துள்ளமை மகிழ்ச்சியானது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடந்த மாதம் 19 இல், நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்தபோது நான், பல விடயங்களை சபையில் குறிப்பிட்டேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிச் சேவைகள் சம்பந்தமாக நீதிமன்றத்திடம் கேட்க முடியாத விடயங்களை, நீதியமைச்சரான என்னிடமே கேட்கின்றனர். நான் அவற்றுக்குப் பதிலளித்துள்ளேன்.

கல்கிசை நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு சட்டவிரோதமாக மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் பெறப்பட்டுள்ளது. இந்நீதிபதி தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிடம் நான், வலியுறுத்தினேன். ஆனால் இது தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பொருளாக வைக்கப்பட்டிருந்த 20 கோடி பெறுமதியான விஸ்கி போத்தல்கள் காணாமலாகியிருந்தன. இது தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

நீதிமன்றத்தின் களஞ்சியசாலையின் கதவின் பூட்டை உடைத்து போத்தல்கள் திருடப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. எனினும் பூட்டுக்கான வழமையான திறப்பினைக் கொண்டே கதவு திறக்கப்பட்டுள்ளதாக அரச பகுப்பாய்வாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். விஸ்கி போத்தல்கள் திருடப்பட்ட விவகாரத்தை மூடி மறைக்க நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் முயற்சிப்பதாக, ஆணைக்குழுவின் பெரும்பாலானவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இவ்விடயத்தை நான் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய பின்னர் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு, பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஹெரோயின்,கஞ்சா ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பில் குறிப்பிடப்பட்டது.

அபாயகரமான போதைப்பொருட்களுக்கு 1000 ரூபா தண்டப்பணம் அல்லது பிற்பகல் 2 மணி அல்லது 3 மணிக்குப் பின்னர் விடுதலை என்ற நிலையே காணப்பட்டது என்றும் தெரிவித்திரந்தமை குறிப்பிடத்தக்கது.

000

  • 403
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads