சினிமா செய்திகள்
கருடன் திரைப்படத்தின் 50-வது நாள் - நடிகர் சூரி ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் க
டிஎன்ஏ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது
பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டி வீரன், ஈட்டி போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர்களை கொண்டவர் நடிகர் அதர்வா. கடந்த ஆண
அமரன் திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை பெற்ற நிறுவனம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவன ட்தயாரிப்பில் உருவாகி வரு
தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருக
கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல்
விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி,
நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதி
உலாஜ் படத்தில் மும்முரமாக இருந்த நடிகை ஜான்வி கபூர் கடுமையான உணவு விஷம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை அவரது தந்தையும்
மறக்க முடியாத நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன்
32000 ரூபாய் செலவில் ஒரு திரைப்படம். கதாநாயகனுக்கு சம்பளம் 140 ரூபாய்.1940 காலகட்டங்களில் திரைப்படத்தின் ஹீரோ என்றால், நல்ல பலசாலியாக, வாளெடுத்து சண்ட
பாடகி ஜானகியின் சாதனைகள்...
60 - வருடங்கள்17 - மொழிகள்48000 - பாடல்கள்4 - தேசிய விருதுகள்32 - மாநில விருதுகள்7 - தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது10 - ஆந்திர மாநில அரசின்
எம் ஆர் ராதா அவர்களின் நாடக கம்பெனியில் ஆறு வருடங்கள் வேலை செய்தேன்ஒரு முறை வீட்டிற்கு வந்து போது என்னை பெற்ற தாயே நடிக்க போன மூஞ்சியை பாரு என்று என்ன
நாகேஷ் என்னும் அற்புத நகைச்சுவை நடிகர்
🌹இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு, ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்
 மிக எளிமையானவர் நடிகர் நாகேஷ்
திரு.நாகேஷ் அவர்கள்.மைலாப்பூர் கபாலி கோவில் தெப்பக்குளத்தின் படிகட்டுகளில் உட்கார்ந்துகொண்டு வற்றிப் போன தெப்பக் குளத்தைப் பார்த்து “அந்தப் பழைய நாள்க
இந்தியன் 2' படத்திற்கு சிறப்பு காட்சிக்கு ஒரு நாள் மட்டும் அனுமதி
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் நாளை ஒரு நாள் மற்றும் இந்த படத்திற்கு 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு
Ads
 ·   ·  831 news
  •  ·  0 friends
  • 1 followers

முன்னேற்றப் பயணத்தை தொடர்வதா இல்லையா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் - ஜனாதிபதி ரணில்

நாட்டுக்குச் செய்ய வேண்டிய அனைத்தும் தம்மால் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, அந்தப் பயணத்தைத் தொடர்வதா? இல்லையா? என்பது குறித்து பொதுமக்களே தீர்மானிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் அல்லது ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயிக்கும் போது நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க மக்களுக்கு சந்தர்ப்பம் உண்டு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவினால் காலி உலுவிட்டகேயில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது -

நாட்டின் எதிர்காலம் என் கையில் உள்ளது என்று இங்கு பாடல் பாடிய இஷாக் மொஹிதீன் தனது பாடலில் கூறினார். உண்மையில், எதிர்காலம் என் கையில் இல்லை, மக்கள் கையில்தான் உள்ளது. இப்போது என்னால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டேன். எனது வீடும் தீப்பிடித்தது. அது பிரச்சினை இல்லை. தற்போது நாடு ஒரளவு சீரான நிலையை எட்டியுள்ளது.

எரிபொருள், மின்சாரம், உரம், பொருளாதாரம் இல்லாத நாட்டை நான் ஏற்றுக்கொண்டேன். யாரும் பொறுப்பேற்க முன்வரவில்லை, ஆனால் நான் ஏற்றுக்கொண்டேன்.  .

2021 ஆம் ஆண்டில் பொருளாதாரம் எதிர்மறையான நிலையில் இருந்தபோது, ​​​​பொருளாதாரம் பொறுப்பேற்கப்பட்டு கட்டமைக்கப்பட்டது. துறைமுகம், விமான நிலையம் மூடப்பட்ட போது நான் நாட்டை பொறுப்பேற்று சீர்செய்தேன். ஆனால் முன்னைய காலத்தில் அந்தப் பயணத்தை புலிகள் முறியடித்தனர்.

2015 இல் பொருளாதாரம் அதே வழியில் கட்டமைக்கப்பட்டது. 2019 இல் நான் நாட்டை ஒப்படைத்தபோது, ​​முதன்மை பட்ஜெட்டில் ஏழு பில்லியன் அந்நியச் செலாவணி இருந்தது.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அடுத்த தேர்தலில் போராட வேண்டும் என்று அன்று கூறினேன். ஆனால் அப்போது பல கட்சிகள் வாக்குறுதி அரசியலிலேயே ஈடுபட்டன. மூன்று பில்லியன் டொலர்களைக் கண்டுபிடிப்பது மட்டுமே எங்களின் பங்காக இருக்க வேண்டும் என்று மேற்கண்ட தேர்தலுக்கு முன்பே சொன்னேன். அன்றைய தேர்தல் அறிக்கையில் அந்த விஷயத்தையும் சேர்த்தோம். அந்த மூன்று பில்லியன் டொலர்கள் இருந்திருந்து நாணய நிதியத்துக்கு சென்றிருந்தால், நான் இன்று இங்கு இருந்திருக்க மாட்டேன்.

அன்றையதினம் எங்களில் ஒரு குழு ஒன்று கூடி மீண்டும் வாக்குறுதிகளை அளிக்கும் ஒரு அரசியல் குழுவை உருவாக்கினார்கள். சிறிகொத்தாவை கைப்பற்றுவோம் என்பதுதான் அவர்களின் கோஷம். நாட்டின் பிரச்சினை சிறிகொத்தவை கைப்பற்றுவதா, இல்லையா என்பதல்லவே. நாட்டின் நெருக்கடி குறித்து பேச கோட்டாபய ராஜபக்ஷ என்னை அழைத்த போது, நானும் தமிழ்க் கட்சிகளுமே சென்றிருந்தோம். இந்தப் பயணம் ஏப்ரல் மாதத்தில் முறியும் என்று எங்களுக்குத் தெரியும். எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்காமல் ஓடிவிட்டார். அவர் தங்களுக்கு வாக்களித்தவர்களுக்குத் துரோகம் செய்தார்.

ஜனதா விமுக்தி பெரமுனவைக் கண்டுபிடிக்கக் கூட முடியாதிருந்தது. தப்பியோடினார்களா? அல்லது வயிற்றுப்போக்கா? தெரியவில்லை. நான் நாட்டைப் பொறுப்பேற்று சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி மூன்றரை மில்லியன் எடுத்திருந்தார்.

எங்கள் விவசாய உற்பத்திகளுக்கு உரம் கிடைக்கவில்லை. இதை நான் அமெரிக்காவில் உள்ள சமந்தா பவரிடம் கூறியபோது, ​​அவர் உரத்தை அனுப்பினார். அங்கிருந்துதான் 2022_-23 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பருவத்திற்குத் தேவையான உரங்கள் வழங்கப்பட்டு விவசாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணி தொடங்கியது. அடுத்த பருவத்தில், பெரும்போகத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்தது. நாணய நிதியத்துடன் கலந்துரையாடியதன் பின்னர், இந்த நடவடிக்கைகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

  • 395
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads