Category:
Created:
Updated:
‘அஸ்வெசும’ வேலைத்திட்டம் தொடர்பான சகல கடமைகளில் இருந்தும் இன்று (8) முதல் விலகுவதாக இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
'அஸ்வெசும' இரண்டாம் கட்ட நலத்திட்ட உதவித்தொகை விண்ணப்பங்கள், வீட்டுமனைகள் கணக்கெடுப்பு, அதிகாரிகளுக்கு பணம் செலுத்துதல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக ஒன்றிய தலைவருக்கு சங்கம் கடிதமொன்றினை அனுப்பி அறிவித்துள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 15 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனவே இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்யாதவர்கள் அடுத்த வாரத்திற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000