தகுதியான அனைவருக்கும் நிரந்தர நியமனம் - தொண்டர் ஆசிரியர்களிடம் அமைச்சர் உறுதி!
வடக்கு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்களால் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைகளில் தோற்றிய குறித்த நியமனத்திற்கு தகுதியானவர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர். இதன்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேநேரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர் முயற்சியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றுவோருக்கு, நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்று குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நிரந்தர நியமனம் கிடைக்காத நிலையில், நீண்ட காலமாக யாழ் போதான வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார தொண்டர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலமையை கவனத்தில் கொண்டு புதிய நியமனங்களை வழங்கும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பதனை தெளிவுபடுத்திய அமைச்சர், எவ்வாறாயினும் எதிர் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000