Ads
சமூக வலைத்தளங்களுக்கு தடை என பாகிஸ்தான் அறிவிப்பு
யூடியூப், எக்ஸ், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் ஜூலை 13 முதல் 18-ம் தேதி வரையில் தடை செய்யப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண முதல்வர் மர்யம் நவாஸ் கூறியபோது வன்முறையை தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சமூகவலைத்தளங்கள் தடை செய்வதன் மூலம் மூலம் வெறுப்பு பேச்சு மற்றும் தவறான கருத்து, தகவல் பகிரப்படுவதை தடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 120 மில்லியன் மக்கள் பஞ்சாப் மாகாணத்தில் வசித்து வரும் நிலையில் யூடியூப், எக்ஸ், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக் உள்ளிட்ட தளங்களை தடை செய்யும் அறிவிப்பால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads