
இஸ்ரேல் - ஹமாஸ் தரப்பினருக்கு இடையில் மீண்டும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் தரப்பினருக்கும் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள போர் நிறுத்த முன்மொழிவுகள் அடங்கிய ஆவணங்கள் ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் கையளிக்கப்பட்டுள்ளன
இந்த ஆவணத்தைத் தங்களது தரப்பினர் ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்
ஹமாஸ் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சியில் எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன. எனினும் அவர்களது முயற்சிகள் பல சந்தர்ப்பங்களில் தோல்வியடைந்துள்ளன
இஸ்ரேல் தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், காசாவில் இருந்து இஸ்ரேல் இராணுவத்தினர் முழுமையாக வெளியேற வேண்டும் எனவும் ஹமாஸ் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000