
கற்றல் செயற்பாடுகளை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு
கற்றல் செயற்பாடுகளை சீர் குலைப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் நியமனம் வழங்குவது இலகுவான விடயம் அல்ல. பொருளாதாரம் நெருக்கடியில் இருக்கும் நிலையிலும் இந்த ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான சவாலை நாம் ஏற்றுக்கொண்டோம்.
நாடு வங்குரோத்து நிலையில் இருந்த காலத்திலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக நிதி ஒதுக்கியதன் காரணமாகவே உங்களை எம்மால் நியமிக்க முடிந்தது. ஆனால் இந்த நியமனத்தை எடுத்துக்கொண்டு குழந்தைகளின் எதிர்காலத்தை இருளாக்கி விடாதீர்கள்.
கல்வித்துறைக்கு பாரிய சேவையாற்றிய ஒருவர் இன்று ஜனாதிபதியாக இருப்பது கல்வித்துறைக்கு கிடைத்த பாக்கியம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000