
போஷாக்கு குறைபாடு, வேலையின்மை வறுமையை நிவர்த்திக்கவே அஸ்வெசும, உறுமய : ஜனாதிபதி
போஷாக்கு குறைப்பாடு, வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை நிவர்த்திக்கவே இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான தொழிற்சாலைகள் மற்றும் அஸ்வெசும, உறுமய போன்ற திட்டங்கள் செயற்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
போஷாக்கு குறைபாடு, வறுமை, வேலையின்மை என்பன நாட்டுக்கு நற்செய்தியா? துயர் செய்தியா? என்று பாராளுமன்றத்தில் நேற்று (2) எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்து மக்கள் சிரமப்படும் வேளையில், பிரதமர் பதவியை ஏற்காமல், பயந்து ஓடுவது நற்செய்தியா? துயர் செய்தியா? என்று கேள்வி எழுப்பினார்
இது கெட்டதாகும். அதனால்தான், அஸ்வெசும திட்டத்தை செயல்படுத்தினோம். குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு பத்து கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது என்று ஜனாதிபதி கூறினார்.