தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த முதலாளியை கைது செய்த அரசு
மியான்மரில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்ததற்காக ஒரு கடை உரிமையாளரை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கடை உரிமையாளரின் மூன்று செல்போன் கடைகளையும் அரசாங்கம் முடக்கியுள்ளது.
தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த காரணத்திற்காக இதேபோல் 10 முதலாளிகளை மியான்மார் அரசு கைது செய்துள்ளது. அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுப்பற்காக அவரை கைது செய்துள்ளார்கள் என்று கேள்வி எழுகிறது. அதற்கு ஒரு வித்தியாசமான காரணத்தை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மியான்மாரில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்தால் விலைவாசி விண்ணை தொடும். பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தால் மியான்மார் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்பதை மக்கள் நம்ப ஆரம்பிப்பார்கள்.
இது அரசாங்கத்திற்கு தலைகுனிவாகும். இது ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை தூண்டும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.
மியன்மாரின் இந்த நடவடிக்கையால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். விலைவாசி உயர்வுக்கு மத்தியில் வேலையும் இல்லாமல் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.