Ads
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 179 பேர் உயிரிழப்பு - பிரேசிலில் சேகம்
பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 179 பேர் உயிரிழந்தனர்.
பிரேசிலின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டி சுல் நகரில் பெய்த கன மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 179 பேர் உயிரிழந்துள்ளதுடன் 33 பேர் காணாமல் போயுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Info
Ads
Latest News
Ads