Category:
Created:
Updated:
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவை சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான மனித வளப் பரிமாற்றத்தை மேலும் ஊக்குவிக்கும் என நம்புவதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்புக்கு தீர்வு காண்பதற்காக இலங்கை மேற்கொண்டுள்ள அண்மைக்கால முயற்சிகளுக்கு அவர் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்
மேலும் அமைச்சர் அலி சப்ரி தலைமை அமைச்சரவை செயலாளர், நீதி அமைச்சர் மற்றும் ஜப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரையும் இதன்போது சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000