Category:
Created:
Updated:
வீடியோவில், இறந்த உறவினரின் சவப்பெட்டியின் அருகில் அமர்ந்து ப்ரொஜெக்டர் வைத்து பெரிய திரையில் சிலி மற்றும் பெரு அணிகள் இடையே நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து விளையாட்டு போட்டியை குடும்பத்தினர் பார்ப்பதை காணமுடிகிறது. இதனிடையே சவப்பெட்டி பூக்கள் மற்றும் கால்பந்து வீரர்களின் ஜெர்சிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும், சவப்பெட்டிக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள பேனரில், "ஃபெனா மாமா, நீங்கள் எங்களுக்கு வழங்கிய அனைத்து மகிழ்ச்சியான தருணங்களுக்கும் நன்றி. உங்களையும் உங்கள் காண்டோரியன் குடும்பத்தையும் நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம்" என அச்சிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.