பேரனுடன் இணைந்து பட்டம் பெற்ற 76 வயது தாத்தா
கனடாவின் மானிடோபா பகுதியில் 19 வயதான தனது பேரனுடன் 76 வயதான தாத்தா பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார். ஜூன் ஜேம்ஸ் ஈஸ்டர் என்ற 76 வயதான நபரே இவ்வாறு பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஈஸ்டர், 19 வயதான பெர்சின் நைட் என்ற தனது பேரனுடன் இணைந்து பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார். இருவரும் ஒரே வகுப்பில் பட்டம் பெற்றுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.தனது பேரனுடன் இணைந்து பட்டம் பெற்றுக்கொள்ள கிடைத்தமை பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக ஈஸ்டர் தெரிவிக்கின்றார்.
தனது பதினாறாம் வயதில் பாடசாலையை விட்டு வெளியேற நேரிட்டதாகவும் பின்னர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
திருமண பந்தத்தில் இணைந்து கொண்டு பிள்ளைகள் பெற்றுக் கொண்டதன் பின்னர் தமக்கு கிடைக்காத கல்வியை பெற்றுக் கொள்ளுமாறு குடும்பத்தினரை ஊக்கப்படுத்தியதாக தெரிவிக்கின்றார்.
பட்டக் கல்வியை இடை நடுவில் கைவிடுவதற்கு பல சந்தர்ப்பங்களில் நினைத்த போதிலும் இறுதியில் வெற்றிகரமாக கற்கைநெறியை பூர்த்தி செய்ய கிடைத்ததாக தெரிவிக்கின்றார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மறைந்த தமது மனைவியை மிகவும் நினைத்துப் பார்ப்பதாக அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு 76 வயதில் பட்டம் பெற்றுக் கொண்டமை ஏனைய பலருக்கு உந்து சக்தியாக அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். Frontier Mosakahiken பாடசாலையில் இந்த இருவரும் டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.