
அமுலுக்கு வரும் வகையில் சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையைத் திருத்தியது - பேருந்துப் பயணக் கட்டணத்தை 5 சதவீதத்தால் குறைப்பதற்கும் நடவடிக்கை
இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையைத் திருத்தியுள்ளது.
இதன்படி 355 ரூபாயாகக் காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 11 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாயாகும்.
420 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரகப் பெற்றோல் லீற்றரின் விலை 41 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 379 ரூபாயாகும்.
377 ரூபாயாக நிலவிய லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 355 ரூபாயாகும்.
ஓட்டோ டீசலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது லீற்றர் 314 ரூபாயிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்பதாக கடந்த நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 344 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 41 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 379 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 355ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதேநேரம் ஏனைய எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இதேநேரம் இன்று (01) முதல் அமுலாகும் வகையில் பேருந்துப் பயணக் கட்டணத்தை 5 சதவீதத்தால் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தப் பேருந்துக் கட்டணத் திருத்தம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சுக்கும் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய புதிய குறைந்தபட்சப் பேருந்து கட்டணம் 30 ரூபாவில் இருந்து 28 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
000