
நெடுந்தீவு அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேர் கைது
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன் இதன்போது 04 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று (01.07.2024) அதிகாலை 25 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி கடந்த ஜனவரிமுதல் இன்று வரையில் 32 படகுகளுடன் 238 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று இலங்கை கடற்படை கூறியுள்ளது அத்துடன் தனது கடல் எல்லையை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
இந்தநிலையில் இன்று கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது
000