சினிமா செய்திகள்
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
Ads
 ·   ·  1410 news
  •  ·  0 friends
  • 1 followers

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார்.

உடல் நலக்குறைவினால் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்றிரவு (30) 11 மணியளவில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது

ஒன்றிணைந்த, பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத நாட்டிற்குள் தமிழர்களுக்கான சம உரிமைகளைக் கோரி, தொடர்ந்தும் நாடாளுமன்றில் குரல் கொடுத்து வந்திருந்த அவர் தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக இருந்துவந்தார்.

1933 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி திருகோணமலையில் பிறந்த இரா. சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி, மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று சட்டத்தரணி ஆனார்.

லீலாதேவி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  சம்பந்தன் 1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.

1983 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர். மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குப்பற்றாமல் போனதால் சம்பந்தன் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி இழந்தார்.

பின்னர் 1989 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார்

இந்தநிலையில், 2001 ஆம் ஆண்டில் புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற புதிய கூட்டணி  கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அந்தக் கூட்டமைப்புக்கு சம்பந்தனுக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது.

அந்தக் கூட்டணி தேர்தல் சட்டத்தில் அங்கீகரிக்கப்படாமையினால் அந்த கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டது.  இந்த தேர்தலில் சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று 18 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளை ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்குச் சார்பாக தமது நிலைப்பாட்டை முன்னெடுத்தனர். இந்தநிலைப்பாட்டிற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி எதிர்ப்புத் தெரிவித்துக் கூட்டமைப்பில் இருந்து விலகினார்.

அத்துடன், 2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி அனுமதிக்கவில்லை.

இதனால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டதுடன், சம்பந்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தநிலையில், 2004, 2010, 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.

2015ஆம் ஆண்டு தேர்தலில் முக்கிய கட்சிகளான ஐக்கியத் தேசியக் கட்சி 106 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மையை பெறாமையினால் இரண்டு முக்கிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசு ஒன்றை அமைத்தன.

இதனால் 16 ஆசனங்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டதுடன், அதன் தலைவர் இரா. சம்பந்தன் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி வரை அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.  பின்னர் 2020ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அவர் தெரிவானார்.

இதேவேளை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக இரா.சம்பந்தனுக்கு 3 மாதக் கால விடுமுறை வழங்க நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டது.

சுகவீனமடைந்துள்ளமையினால் அவருக்கு விடுமுறை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அண்மைய நாட்களாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்றிரவு காலமானார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் மலர்சாலையில் வைக்கப்பட்டு அதன்பின்னர் அவரது பூதவுடல் நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்பின்னர் அன்னாரின் பூதவுடல் இறுதிக் கிரியைகளுக்காக அவரின் சொந்த ஊரான திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 410
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads