Beautiful birds
விசுவாவசு வருடம் தை மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை 15.1.2026
இன்று இரவு 09.45 வரை துவாதசி. பின்னர் திரியோதசி
இன்று அதிகாலை 04.55 வரை அனுஷம். பின்னர் கேட்டை.
இன்று இரவு 10.26 வரை விருத்தி. பின்னர் துருவம்.
இன்று காலை 08.44 வரை கௌலவம். பின்னர் இரவு 09.45 வரை தைத்தூலம். பின்பு கரசை.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 01.00 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
1) அமைதியாக இருங்கள் - உங்களுக்கு பிரச்சினை இல்லை என்றால்.
2) அமைதியாக இருங்கள் - நீங்கள் ஒரு அப்பட்டமான பொய் சொல்ல ஆசைப்படும் போது.
3) அமைதியாக இருங்கள் - உங்கள் வார்த்தைகள் வேறு ஒருவரின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் என்றால்.
4) அமைதியாக இருங்கள் - உங்கள் வார்த்தைகள் நட்பை சேதப்படுத்தினால்.
5) அமைதியாக இருங்கள் - நீங்கள் மோசமாக உணரும்போது.
6) அமைதியாக இருங்கள் - கத்தாமல் சொல்ல முடியாவிட்டால்.
7) அமைதியாக இருங்கள் - உங்கள் வார்த்தைகள் இறைவன் அல்லது உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் மோசமான பிரதிபலிப்பாக இருந்தால்.
8) அமைதியாக இருங்கள் - உங்கள் வார்த்தைகளை நீங்கள் திரும்பி பெற வேண்டியிருந்தால்.
9) அமைதியாக இருங்கள் - நீங்கள் ஏற்கனவே ஒரு முறைக்கு மேல் கூறியிருந்தால்.
10) அமைதியாக இருங்கள் - நீங்கள் ஒரு பொல்லாத நபரைப் புகழ்ந்து பேச ஆசைப்படும் போது.
11) அமைதியாக இருங்கள் - நீங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும் போது.
"யாரொருவர் வாயையும் நாவையும் பாதுகாப்பாரோ அவர் தனது ஆன்மாவை பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றுகிறார்".
என் அம்மாவைத் தன் அம்மா மாதிரி நினைச்சவன் சந்திரபாபு.
நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் என் வீட்லயே கிடப்பான். திடீர்னு நடுராத்திரியில வந்து நின்னுட்டு, 'எனக்கு உப்புமா வேணும், ரவா தோசை வேணும்’னு உரிமையாக் கேட்பான். எனக்கும் அவனுக்கும் அவ்வளவு நட்பு.
டேய் விசு... நீ எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் ரொம்ப அருமையா டியூன் போடுறே. எனக்குத்தான் சுமாரா போடுறே’னு சண்டை போடுவான். அவனுக்கு நான் போட்ட பாட்டுல எனக்கு ரொம்பப் பிடிச்சது, 'பிறக்கும்போதும் அழுகின்றான்... இறக்கும்போதும் அழுகின்றான்’ பாட்டு. இந்தப் பாட்டைப் பத்திச் சொல்றப்ப ஒரு சம்பவத்தைச் சொல்லணும்.
இந்தியா - பாகிஸ்தான் யுத்த நிதி கொடுக்குறதுக்காக, தமிழ் சினிமா உலகத்தைச் சேர்ந்த பல கலைஞர்கள் சிவாஜி தலைமையில் டெல்லிக்குப் போயிருந்தோம். சந்திரபாபுவும் வந்திருந்தான். அப்போ ஜனாதிபதியா இருந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். தமிழ்நாட்டுல இருந்து வந்திருக்கோம்னு கேள்விப்பட்டதும் எங்களைச் சந்திச்சார் அவர்.
அப்போ அவர் முன்னால 'பிறக்கும்போதும் அழுகின்றான்... இறக்கும்போதும் அழுகின்றான்’ பாட்டை சந்திரபாபு பாடிக் காட்டினான். டாக்டர் ராதாகிருஷ்ணன் பாட்டை ரொம்ப ரசிச்சுக் கேட்டுட்டு இருந்தப்ப, இந்தப் படுவா ராஸ்கல் என்ன பண்ணான் தெரியுமா? பாடிக்கிட்டே சர்ருனு தாவிப்போய் அவர் மடில உட்கார்ந்துட்டு, அவர் தாவாங்கட்டையைப் பிடிச்சுக்கிட்டு, 'நீ பெரிய ஞானஸ்தன்’னு சொல்லிட்டான். நாங்க பதறிப்போயிட்டோம். ஆனா, டாக்டர் ராதாகிருஷ்ணன் சிரிச்சுட்டே, அவனை அணைச்சுக்கிட்டார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உதவி செய்யும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். பணிபுரியும் இடத்தில் பொறுமை வேண்டும். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்கவும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
ரிஷபம்
தந்திரமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள் வழியில் மதிப்புகள் உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் சிக்கல்கள் குறையும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
மிதுனம்
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். புதிய பொருள்கள் மீது ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர வழியில் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் வந்து சேரும். வரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
ஆடம்பரமான பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். வருமான உயர்வு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சாதகமான சூழல் உண்டாகும். சிற்றின்ப செயல்களில் நாட்டம் ஏற்படும். குழந்தைகள் பற்றிய எண்ணம் மேம்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். துன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
சிம்மம்
மேல்நிலைக் கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகன பிரச்சனைகள் குறையும். தந்தை வழி சொத்துக்களில் நிதானத்துடன் செயல்படவும். வாசனை திரவியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் நற்பெயர்கள் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான காரிய அனுகூலம் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
உடன் பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். விளையாட்டு துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அமையும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
துலாம்
சிறு தூர பயணங்களால் மாற்றம் ஏற்படும். பத்திரம் தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். அடமான பொருட்கள் பற்றிய எண்ணங்கள் பிறக்கும். வாகன பயணங்களில் கவனத்துடன் இருக்கவும். சிரமம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
உடன் இருப்பவர்களின் எண்ணங்களை தெரிந்து கொள்வீர்கள். சிந்தித்து செயல்படுவதன் மூலம் தேவையற்ற பகைமையை தவிர்க்க முடியும். தர்க்க விவாதங்களை தவிர்ப்பது மன அமைதியை ஏற்படுத்தும். உத்தியோகப் பணி மாற்ற தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உருவாகும். இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
தனுசு
திடீர் பயணங்கள் ஏற்படும். ரகசியமான சில முதலீடுகள் செய்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒரு விதமான இறுக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளவும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
மகரம்
கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான பிரசனைகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
மற்றவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய வேலை நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். தைரியமான சில முடிவுகளால் மாற்றம் பிறக்கும். அரசு வழியில் இருந்த இழுபறிகள் மறையும். வாகன பழுதைகளை சீர் செய்வீர்கள். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மீனம்
வெளியூர் பயணங்கள் கைகூடும். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் மேம்படும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். காப்பகம் சார்ந்த பணிகளில் ஆதாயம் மேம்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல்கள் ஏற்படும். சிரமம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 30 ஆம் தேதி புதன்கிழமை 14.1.2026.
இன்று இரவு 07.43 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.
இன்று அதிகாலை 02.20 வரை விசாகம். பின்னர் அனுஷம்
இன்று இரவு 09.59 வரை கண்டம். பின்னர் விருத்தி.
இன்று காலை 06.39 வரை பவம். பின்னர் இரவு 07.43 வரை பாலவம். பின்பு கௌலவம்.
இன்று அதிகாலை 02.20 வரை மரண யோகம். பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
குடும்பஸ்தன் படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த படம் 8 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தில் ஆந்திர இறக்குமதியான சான்வே மெக்ஹானாவின் நடிப்பு அற்புதமாக இருந்தது. அந்த படத்தில் எதார்த்தமான ஒரு சாதாரண குடும்பத்து மனைவியாக நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து, நடிகை மேகனாவை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரின் இன்ஸ்டாகிராமை தேடி கண்டுபிடித்து, அவரின் போட்டோக்களுக்கு லைக்குகளை பதிவிட்டு வருகின்றனர். சுருட்டை முடி, வசீகரிக்கும் அழகு என தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த படி இருக்கும் நடிகை சான்வே மேகனா, குடும்பஸ்தன் படத்தில் கவர்ச்சி காட்டாமல் நடித்து இருக்கிறார். ஆனால், தெலுங்கில் இவர், 'Anaganaga Oka Raju' என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது. அந்த படத்தில் ஆந்திரா டூ தெலுங்கான என்ற பாலுக்கு குட்டி பாவடை போட்டுக்கொண்டு 'ஊ சொல்றியா மாமா' பாடல் சமந்தாவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.



















