·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 749
  • More

Test 1

Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பூர்வீகச் சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபார பணிகளில் சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தாயாரின் உடல்நலம் மேம்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய எண்ணங்களில் இருந்த தடைகள் விலகும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

ரிஷபம்

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதை தவிர்க்கவும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் பிறக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். வேலையாட்கள் மாற்றம் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

மிதுனம்

உத்தியோக பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். பூர்விக சொத்துக்களில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்குச் செயல்பாடுகளால் விரயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கடகம்

கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மாற்றத்தினை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை

 

சிம்மம்

எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். தாய் மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். பணி நிமித்தமான செயல்களில் புதுமையான சூழல்கள் அமையும். மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் துரிதம் ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கூட்டு வியாபாரத்தில் பொறுமை வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

கன்னி

கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அடமான பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

துலாம்

பொது வாழ்வில் செல்வாக்கு கூடும். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்கள். நினைத்த சில காரியங்களை முடிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பிடிவாதப் போக்கை தளர்த்திக்கொள்ளவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளால் லாபம் மேம்படும். பணி நிமித்தமான முயற்சிகள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

விருச்சிகம்

அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு, சுறுசுறுப்பின்மை உண்டாகும். உறவினர்களின் வருகை ஏற்படும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வர்த்தக பணிகளில் லாபகரமான சூழல்கள் அமையும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

தனுசு

கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் மேம்படும். தோற்றப்பொலிவு மேம்படும். நண்பர்கள் வழியில் அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் சில உதவிகள் சாதகமாகும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பேச்சுக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் துரிதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

மகரம்

உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் இழுபறியான சூழல் உண்டாகும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஊடக துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

கும்பம்

உயரதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். அரசு சார்ந்த அதிகாரிகளுடன் அளவுடன் இருப்பது நல்லது. குழந்தைகள் வழியில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்துக்கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரப் பயணங்களில் புதிய அனுபவங்கள் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

மீனம்

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வர்த்தக பணிகளில் மேன்மை உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியான வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

  • 56
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 9 ஆம் தேதி புதன்கிழமை 26.8.2026.

இன்று காலை 08.50 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

இன்று அதிகாலை 12.18 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.

இன்று காலை 10.13 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம்.

இன்று காலை 08.50 வரை தைத்தூலம். பின்னர் இரவு 09.22 வரை கரசை. பிறகு வணிசை. இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=630&dpx=2&t=1787714377

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 59
  • 65

Good Morning...

  • 64
·
Added article

ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த சமீபத்திய புகைப்படங்களில், ரம்யா பாண்டியன் கிளாசிக் மாடர்ன் கெட்டப்பில் அட்டகாசமான போஸ்களை கொடுத்துள்ளார். ஃபேன்சி டிசைனர் பேக்ரவுண்டில், ஸ்லீவ்லெஸ் வைட் டாப்ஸ் மற்றும் கருப்பு உடையில் அவர் கொடுத்திருக்கும் கில்லர் லுக் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. மொட்டை மாடி சேலை லுக்காக இருந்தாலும் சரி, இந்த மாதிரி மார்டன் லுக்காக இருந்தாலும் சரி... ரம்யா பாண்டியன் எப்போதும் கெத்துதான் என நெட்டிசன்கள் கமெண்ட் பாக்ஸில் லைக்ஸ்களையும் ஹார்ட்டின்களையும் குவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா பாண்டியன், அதனைத் தொடர்ந்து தேசிய விருது பெற்ற ஜோக்கர் மற்றும் சமுத்திரகனியுடன் ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் தனது இயல்பான மற்றும் நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இருப்பினும், அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையையும் அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது அந்த புகழ்பெற்ற மொட்டை மாடி ஃபோட்டோ ஷூட் தான். அதன் பிறகு டிவியில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற பல ஹிட் நிகழ்ச்சிகளில் பங்கேற்று மேலும் பிரபலமானார். சினிமா, சின்னத்திரை, போட்டோஷூட் என பல களங்களில் தொடர்ந்து கலக்கி வரும் ரம்யா பாண்டியனின் இந்த புதிய மார்டன் லுக் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் செம்ம ட்ரெண்டிங்கில் உள்ளது.

  • 157
·
Added article

கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடித்து புகழடைந்த கனகா தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். அவரது தாய் தேவிகாவின் மரணம் அவரை நிலைகுலைய செய்ய சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கினார். பல வருடங்கள் தனிமையிலேயே இருந்துவருகிறார். இந்நிலையில் அவர் குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான தேவிகாவின் மகள் கனகா. அவரை கங்கை அமரன் தனது கரகாட்டக்காரன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்தார். ராமராஜன் ஹீரோவாக நடித்திருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கனகாவின் நடிப்பு முதல் படம் போன்றே இல்லை. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு வரிசையாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அதனை பயன்படுத்தி தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்துக்கொண்டார் அவர்.

குட்டி பத்மினிக்கு பிறகு பலர் கனகாவை சந்திக்க முயன்றாலும் அவர்களால் பார்க்க முடியவில்லை. மேலும் கனகாவை பேட்டி எடுப்பதாகவும்; விரைவில் அது தனது யூடியூப் சேனலில் வரும் என்றும் பத்மினி கூறியிருந்தார். ஆனால் அவரோ பேட்டி கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக நின்றுவிட்டார். இந்நிலையில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சமீபத்திய பேட்டியில் கனகா குறித்து பேசியது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பாலாஜி பிரபு அளித்த அந்தப் பேட்டியில், "கனகாவை பொறுத்தவரை அவரது அம்மா அருகே இல்லையென்றால் பேசுவதற்குகூட பயப்படுவார். அவரது அம்மா இறந்த பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒரு ஆள் சப்போர்ட்டில் வாழ்ந்தாலே இந்தப் பிரச்னை வரத்தான் செய்யும். பலருடன் பழக வேண்டும். நிறைய நண்பர்களை அருகே வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் எல்லாம் இருந்தால் கஷ்டம் கொஞ்சம் குறையும். யாருமே அருகே இல்லாததால் இடிந்து போய்விட்டார். கனகாவின் தாயும், தந்தையும் பேசிக்கொள்வதில்லை.

இருப்பினும் சொத்தில் தனக்கு பங்கு வேண்டுமென்று கனகாவின் தந்தை வழக்கு தொடுத்திருந்தார். தேவிகா இருக்கும்வரை அந்த வழக்கை நடத்திக்கொண்டிருந்தார். பிறகு கனகா சென்றுகொண்டிருந்தார். ஒருநாள் அவர் கோர்ட்டில் அமர்ந்திருக்கும்போது அவர் அருகே ஒரு பெரியவர் அமர்ந்து எப்படி ம்மா இருக்க என்று கேட்டார். இவர் வேறு யாரோ என்று நினைத்துக்கொண்டு நன்றாக இருக்கிறேன் என சொன்னார். அந்த நபர்தான் அவரது அப்பா. அப்படித்தான் இருந்தார்கள் அவர்கள் இரண்டு பேரும்" என்றார்.

  • 158
·
Added a news

மொண்ட்ரியால்-பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் விமானம் மோதியதில், விமான நிலைய ஊழியர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மொண்ட்ரியால் காவல்துறை தெரிவித்துள்ளது.

மாலை 7:30 மணியளவில், விமான நிலையத் தாரைத்தளத்தில் பின்னோக்கி நகர்ந்துகொண்டிருந்த விமானம் ஒன்று மோதியதில் ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.

தகவல் கிடைத்ததும் அவசர உதவிக் குழுவினர் விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணை, கனடாவின் வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மொண்ட்ரியால் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் என்ன நிகழ்ந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய, காவல்துறையினரும் தடயவியல் நிபுணர்களும் தளத்தில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு இடையிலும் விமான நிலையத்தின் இயல்புச் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனினும், பயணிகள் தங்களது விமானங்களின் நிலையைச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் மூலம் நேரடியாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு மொண்ட்ரியால் விமான நிலைய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

  • 163
·
Added a news

கனடாவில், ஈழத் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெலா மார்டின் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெலா மார்டின் மற்றும் வட மாகாண ஆளுநர் என். வேதநாயகன், இந்த குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை நன்கொடையாளர்கள்  உள்ளிட்ட பலர் பங்கேற்று இருந்தனர்.

இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்த இலங்கையர்கள் அந்நாட்டுக்கு பல்வேறு வகையில் சேவைகளை வழங்கி வருவதாக இலங்கைக்கான கனடிய தூதுவர் இஸபெல்லா மார்டின் தெரிவித்துள்ளார்.

கனடாவின் வெற்றிக்கு புலம்பெயர் இலங்கையர்களின் பங்களிப்பு மகத்துவமானது என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கனடிய புலம்பெயர் தமிழர்கள் தாயகத்திற்கு கொடைகளை வழங்குவதும் தங்களது திறமைகளை வழங்குவதும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கனடாவில் பெற்றுக் கொண்டவற்றை தாயக சமூகத்திற்கு வழங்குவது போற்றுதற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணம் பெரும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

கனடாவின் சார்பில் இந்த நன்கொடை வழங்குவதற்கு வழங்கும் நிகழ்வுடன் தொடர்புடைய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.  

இதேவேளை, கனடிய வாழ் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஈழத்து தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருவதாக வட மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

கனடாவில் கடின உழைப்பில் பெற்றுக் கொள்ள பட்ட பணம் தாயகத்தில் தேவைகள் உடையவருக்கு உதவுவதற்காக பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் சமூகத்திடம் தாம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் சமூகத்தினர் தாயகத்திற்கு தொழில்நுட்பத்தையும் அறிவையும் வழங்க முடியும் எனவும் மருத்துவமனைகளுக்கு உதவுமாறு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எமது மருத்துவமனைகளுக்கு காணப்படும் முக்கியமான தேவைப்பாடுகளை கண்டறிந்து பேண்தகு அடிப்படையில் அவற்றை பூர்த்தி செய்யுமாறு புலம்பெயர் சமூகத்திடம் கோருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் புலம்பெயர் சமூகத்தினர் இலங்கையில் முதலீடு செய்வதில் எதிர்நோக்கிய நிர்வாக மற்றும் ஏனைய சிக்கல்களை களைவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

வட மாகாணத்தை முதலீடுகளுக்கு சிறந்த ஓர் மாகாணமாகவும் சமூக பொறுப்புடைய ஒரு மாகாணமாகவும் மாற்றுவதற்கு முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொடையாளர்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டுமே பெருந்தொகை பணத்தை நம்பி கொடுப்பார்கள் எனவும் தற்போதைய சமூகத்தில் ஏமாற்று பேர்வழிகள் இருக்கிறார்கள் எனவும் இந்த கொடையாளி மீது நம்பிக்கை கொண்டு பெருந்தொகை பணம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்கொடையாளர்களின் சேவை தொடர வேண்டும் எனவும் வடமகாணத்திற்கு தொடர்ந்து சேவைகள் ஆற்றப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

  • 167
·
Added a poem
தடிக்கு பயந்து
தப்பிய ஆடுகள்
தஞ்சம் புகுந்தது...
தெருமுனை கசாப்புகடையில்..!
  • 168
  • 166
  • 165
  • 165
·
Added a post

ஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது.

1. சாப்பிடும் முன் மற்றவர்களின் பசியை உணர்ந்த தலைமுறை.

2. நெருக்கடியான வீடுகளில் மிகுந்த அன்புடன் வாழ்ந்த தலைமுறை.

3. பொறுப்புகளை அறிந்த தலைமுறை. 'நான்' என்று சொல்லாமல் 'நாம்' என்று வாழ்ந்த தலைமுறை.

4. பட்டங்கள் இல்லாவிட்டாலும், வாழ்க்கையைப் படித்த தலைமுறை.

5. கடிகாரம் இல்லாவிட்டாலும், நேரத்தை சரியாக பயன்படுத்திய தலைமுறை.

6. இன்டர்நெட் பார்க்காமல் அறிவை நிரப்பிக்கொண்ட தலைமுறை.

7. கால்குலேட்டர் இல்லாவிட்டாலும் கணக்கு செய்ய முடிந்த தலைமுறை.

8. மொபைல் போன்கள் இல்லாவிட்டாலும் நட்பு உரையாடல்களுக்கு குறைவில்லாத தலைமுறை.

9. TV இல்லாவிட்டாலும் வேடிக்கையாக நேரத்தை கழித்த தலைமுறை.

10. GPS இல்லாவிட்டாலும் இலக்கை துல்லியமாக அடைய முடிந்த தலைமுறை.

11. தொழில்நுட்பம் இல்லாவிட்டாலும் சுக சந்தோஷங்களுடன் வாழ்ந்த தலைமுறை.

12. AC, கூலர் இல்லாவிட்டாலும் திறந்தவெளியில் சுகமாக உறங்கிய தலைமுறை.

13. மினரல் வாட்டருக்கு பதில் குளம்/கிணற்று நீர் குடித்து ஆரோக்கியமாக வாழ்ந்த தலைமுறை.

14. பீட்சா, பர்கர் இல்லாமல் பஞ்சு மிட்டாய், பொரி சாப்பிட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்த தலைமுறை.

15. இரவுகளில் வீட்டு திண்ணையில் சுகமாக கதை பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்த தலைமுறை.

16. ஆறு வயது வரை குழந்தைகளின் பால்யத்தை விளையாட்டு பாட்டுகளால் நிரப்பிய தலைமுறை.

17. அதன் பிறகு ஒரு பைசா கட்டணம் இல்லாத அரசு பள்ளிகளில் தமிழ் மீடியத்தில் குழந்தைகளை படிக்க வைத்து - அங்கே தமிழிலும், இங்கே ஆங்கிலத்திலும் புலவர்களாக ஆகும்படி குழந்தைகளை உருவாக்கிய தலைமுறை.

18. கிலோமீட்டர் தூரத்தையும் சுலபமாக நடக்க முடிந்த தலைமுறை.

19. ஒழுக்கம் தவறிய பிள்ளைக்கு பள்ளியில் ஆசிரியர் நாலு அடி கொடுத்தால் - அவனுக்கு வீட்டில் இன்னும் பத்து அடி கொடுத்த தலைமுறை.

20. தெருக்கூத்து, தோல் பொம்மலாட்டம், புராண கதைகளை ரசித்த தலைமுறை.

21. சென்சார் தேவையில்லாத கருத்துள்ள கருப்பு-வெள்ளை படங்கள் பார்த்த தலைமுறை.

22. வீட்டு வாசலை கோலங்களால் அலங்கரித்த தலைமுறை.

23. வேலையாட்கள், யோகா, ஜிம் இல்லாமல், மூட்டை மூட்டையாக வேலை செய்து, வியர்வை சிந்தி நூறு வயது வாழ்ந்த தலைமுறை.

24. உறவுகளுக்கு, சொந்தங்களுக்கு மதிப்பளித்த தலைமுறை.

25. சொத்துகளை விட, பாசத்திற்கும், பந்தங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்த தலைமுறை.

26. கூட்டுக் குடும்பங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்த தலைமுறை.

27. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரையும் அரவணைத்து சென்ற தலைமுறை.

28. வியாபாரத்தில் கலப்படத்திற்கு இடம் கொடுக்காத தலைமுறை.

29. மற்றவர்களின் நன்மையை விரும்பிய தலைமுறை.

30. நீதி நேர்மையுடன் ஏமாற்றாமல் வாழ்ந்த தலைமுறை.

31. கல்லை சாப்பிட்டாலும் ஜீரணிக்க முடிந்த தலைமுறை.

32. கார்ப்பரேட் மருத்துவமனைகள் இல்லாமலும் ஆரோக்கியமாக வாழ்ந்த தலைமுறை.

33. ஹார்ட் அட்டாக், கேன்சர் பற்றி தெரியாத தலைமுறை.

34. BP, சுகர் வரவிடாத தலைமுறை.

35. லாந்தர் விளக்குகளால் வாழ்க்கையில் ஒளி நிரப்பிய தலைமுறை.

36. கஷ்டங்களை தைரியமாக எதிர்கொண்ட தலைமுறை.

37. எவ்வளவு இருந்தாலும் இன்னும் இன்னும் வேண்டும் என்ற பேராசை இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்த தலைமுறை.

38. ஆடம்பரங்களுக்கு தூரமாக இருந்த தலைமுறை. போஸ்ட் கார்டுகளில் உரையாடல் நடத்திய தலைமுறை.

39. தியாகங்களால் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்த தலைமுறை. சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு சகோதரத்துவத்துடன் வாழ்ந்த தலைமுறை.

40. காபி, டிபன் இல்லாமல் பழைய சோறு சாப்பிட்டு பள்ளிக்கு ஓடிய தலைமுறை.....

அப்படிப்பட்ட தலைமுறையில் உள்ள அரிய மனிதர்கள் இன்று ஒவ்வொருவராக நம்மை விட்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.

அவர்களை இழக்கும் போது எல்லாவற்றையும் இழப்பது போல் தோன்றுகிறது.

_போய்க்கொண்டிருக்கும் அந்த தலைமுறையிடம் இருந்து இந்த தலைமுறை எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் - எதிர்காலம் இருள் மயமே!_

அந்த தலைமுறை உண்மையில் நம் கலாச்சாரம், நம் மதிப்புகளின் பிரதிபலிப்பு. அவர்களைப் போன்ற மனங்கள் மீண்டும் வராது... அவர்களை இழப்பது என்பது நம் வேர்களை இழப்பதே....

அந்த தலைமுறை காட்டிய மதிப்புகள், அன்பு, நேர்மை இந்த தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டும்...

தொழில்நுட்பத்துடன் முன்னேறுகிறோம் ஆனால் மதிப்புகளில் பின்னோக்கி செல்கிறோம்… அந்த தலைமுறை நமக்கு மனிதநேயம் என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தது...

லாந்தர் ஒளியில் வெளிச்சம் நிரப்பியது அந்த தலைமுறை – கரண்ட் விளக்கு ஒளியில் இருளை வளர்த்துக்கொள்கிறது இந்த தலைமுறை.

*"அவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்தது இயற்கையுடன் சகவாழ்வு. நாம் கற்றுக்கொள்வது இயந்திர வாழ்க்கை."*

*சரியா? தவறா?* ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.??

  • 168
  • 166
  • 164
  • 165
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பணியாட்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில்யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர். யாருக்கும் எந்த உறுதிமொழியும் தராதீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.

மிதுனம்: மகனின் படிப்பு, மகளின் திருமணம் என்று அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் நிதானம் தேவை. பங்குதாரர்களின் ஆலோசனை களைக் கேட்டு செயல்படவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

கடகம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் சாதகமான தீர்வு கிட்டும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

சிம்மம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்துக்காக புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரி பாராட்டுவார்.

கன்னி: தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். வியாபாரத்தில் இருந்த அலைச்சல், டென்ஷன் விலகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.

துலாம்: திட்டமிட்ட வேலைகளை போராடி முடிக்க வேண்டி வரும். மகளின் திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இருக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரம் லாபம் கிட்டும்.

விருச்சிகம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவரு வீர்கள். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். அலுவலக ரீதியான பயணத்தால் ஆதாயம் உண்டு. தொழிலில் போட்டிகள் குறையும். பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும்.

தனுசு: தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும். பணவரவால் வீடு, வாகனத்தை மாற்றுவீர். தந்தைவழி சொத்துகள் கிடைக்க வாய்ப்புண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உதவிகரமாக செயல்படுவர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

மகரம்: முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். வீட்டு பெரியவர் களின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவது நல்லது. வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

கும்பம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர். பிள்ளைகளால் பெருமையடைவீர். பூர்வீக சொத்து வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர். மனைவி வழி உறவினர்களால் செலவு வரும். நண்பர்கள் உதவியுடன் புது வேலை கிட்டும். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு.

  • 213
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 8 ஆம் தேதி செவ்வாய்கிழமை 25.8.2026.

திதி

சுக்ல பக்ஷ துவாதசி  - Aug 24 04:19 AM – Aug 25 06:21 AM

சுக்ல பக்ஷ திரயோதசி  - Aug 25 06:21 AM – Aug 26 07:59 AM

நட்சத்திரம்

உத்திராடம் - Aug 24 08:28 PM – Aug 25 10:51 PM

திருவோணம் - Aug 25 10:51 PM – Aug 27 12:47 AM

கரணம்

பாலவம் - Aug 24 05:22 PM – Aug 25 06:21 AM

கௌலவம் - Aug 25 06:21 AM – Aug 25 07:13 PM

சைதுளை - Aug 25 07:13 PM – Aug 26 07:59 AM

யோகம்

ஆயுஷ்மான் - Aug 24 07:03 AM – Aug 25 07:40 AM

சௌபாக்யம் - Aug 25 07:40 AM – Aug 26 07:58 AM

வாரம்

செவ்வாய்க்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:01 AM

சூரியஸ்தமம் - 6:20 PM

சந்திரௌதயம் - Aug 25 4:31 PM

சந்திராஸ்தமனம் - Aug 26 4:11 AM

நல்ல நேரம்:

04:25 AM – 05:13 AM

11:46 AM – 12:35 PM

03:48 PM – 05:33 PM

image_transcoder.php?o=sys_images_editor&h=629&dpx=2&t=1787643436

  • 217

Good Morning...

  • 245
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: குடும்பத்தில் சலசலப்புகள் ஓய்ந்து அமைதி திரும்பும். வெளிநாட்டுப் பயணத்துக்கு விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். கலைப் பொருட்கள் சேரும்.

ரிஷபம்: வீட்டில் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். வீடு, கடையை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரம் திருப்திகரமாக அமையும். எதிலும் பொறுமை தேவை.

மிதுனம்: குடும்பத்தில் யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பணத்தை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். அலுவலக விஷயமாக அலைச்சல், அசதி ஏற்படும்.

கடகம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் ஏற்பாடாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு பாராட்டு கிடைக்கும்.

சிம்மம்: இழுபறியாக உள்ள பிரச்சினைகளில் இருந்து விடுபட மாற்று வழியைக் கண்டறிவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உற்சாகம், தோற்றப் பொலிவு, ஆரோக்கியம் கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படு வீர்கள். பெற்றோர் உடல்நலம் சீராகும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.

துலாம்: உங்களது வெளிப்படையான, சாதுர்யமான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் ஏற்படும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிகம்: மனதுக்கு இதமான செய்தி வரும். உடல் சோர்வு, வயிற்று வலி குணமாகும். தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சில் பொறுமை அவசியம்.

தனுசு: குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். திடீர் பயணம், அலைச்சல், அசதி இருந்தாலும், ஆதாயமும் உண்டு. பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச் சுமை கூடும்.

மகரம்: புதிய மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் பண உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுது நீங்கும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்கள் சந்திப்பும், அதனால் ஆதாயமும் உண்டாகும்.

கும்பம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். வெளியூர் பயணம் திருப்தி தரும்.

மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வீண், செலவைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் பிரச்சினைகள் ஓயும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

  • 404
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 7 ஆம் தேதி திங்கட்கிழமை 24.8.2026.

இன்று அதிகாலை 05.33 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.

இன்று இரவு 10.16 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.

இன்று காலை 09.36 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான்.

இன்று அதிகாலை 05.53 வரை பத்திரை. பின்னர் மாலை 06.27 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று இரவு 10.16 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=627&dpx=2&t=1787540223

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 408

Good Mornrng...

  • 402
·
Added article

கதை சூப்பரா இருக்கு.. ஆனா பார்த்திபனே ஹீரோவா நடிக்கட்டும்!" – கேப்டன் விஜயகாந்தின் அந்தப் பெரிய மனசு!

நண்பர்களே, இன்னைக்கு தமிழ் சினிமாவுல பார்த்திபன் சாரை ஒரு வித்தியாசமான இயக்குநராவும், நடிகராவும் நமக்கு நல்லா தெரியும். அவரோட லைஃபையே மாத்துன படம் 1989-ல வந்த 'புதிய பாதை'. ஆனா, அந்தப் படத்துக்குப் பின்னாடி நம்ம 'கேப்டன்' விஜயகாந்த் சாரோட ஒரு செம மாஸான, பெருந்தன்மையான கதை இருக்கு தெரியுமா? அதைப்பத்தி இயக்குநர் செந்தில்நாதன் சமீபத்துல ஒரு பேட்டியில சொல்லியிருக்காரு.

பாக்யராஜ் சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்துட்டு, 'தாவணிக் கனவுகள்' படத்துல நடிச்சதுக்கு அப்புறம் கிட்டத்தட்ட 5 வருஷமா பார்த்திபன் சாருக்கு பெருசா வாய்ப்பே இல்லையாம். அப்புறம்தான் செம வெறியோட 'புதிய பாதை' கதையை ரெடி பண்ணி, தயாரிப்பாளர் சுந்தரம்கிட்ட சொல்லியிருக்காரு. கதை தயாரிப்பாளருக்குப் பிடிச்சுப் போக, "இதை விஜயகாந்த்கிட்ட சொல்லி ஓகே பண்ணுங்க"ன்னு சொல்லியிருக்காரு.

கதையைக் கேட்ட கேப்டனுக்கு செம குஷி! "வில்லனா இருக்குறவன் கடைசியில திருந்துற இந்த கேரக்டர் சூப்பரா இருக்கு, நானே ஹீரோவா நடிக்கிறேன்"னு சொல்லியிருக்காரு. (அப்பவே கேப்டன் டாப் ஹீரோ!).

ஆனா அப்போ அங்க ஒரு செம ட்விஸ்ட் நடந்துச்சு! விஜயகாந்தோட பிரண்டான இப்ராஹிம் ராவுத்தர், "விஜி.. இந்தக் கதையை எழுதுன மூர்த்தி (பார்த்திபன்) இருக்காரே, அவரோட பாடி லாங்குவேஜுக்கு அவரே இந்த ரவுடி கேரக்டர் பண்ணா இன்னும் எதார்த்தமா இருக்கும். அவருக்கே இந்த சான்ஸைக் கொடுப்போம்"னு ஒரு ஐடியா கொடுத்திருக்காரு.

**இங்கதான் கேப்டன் 'ரியல் ஹீரோ'வா மாறினாரு!**

சின்னதா கூட யோசிக்காம, உடனே தயாரிப்பாளருக்கு போன் போட்டு, "இந்தப் படத்துல பார்த்திபனே ஹீரோவா நடிக்கட்டும், படம் கண்டிப்பா ஹிட் அடிக்கும்"னு சிபாரிசு பண்ணியிருக்காரு.

அப்படி ரிலீஸான 'புதிய பாதை' படம் தியேட்டர்ல சும்மா மிரட்டுச்சு! பாக்ஸ் ஆபீஸ்ல செம கலெக்ஷன் பண்ணது மட்டுமில்லாம, சிறந்த தமிழ் படத்துக்கான **தேசிய விருதையும் (National Award)** தட்டிட்டு வந்துச்சு. அதுமட்டுமில்ல, இந்தப் படத்தோட ஷூட்டிங் அப்போதான் பார்த்திபன் சாருக்கும், நடிகை சீதாவுக்கும் காதலே மலர்ந்துச்சுன்றது இன்னொரு சுவாரஸ்யமான தகவல்!

இன்னைக்கு வரைக்கும் சினிமாவுல எத்தனையோ பேர் அடுத்தவங்க வாய்ப்பை பறிக்கப் பாக்குற காலத்துல, தன் கைக்கு வந்த ஒரு நேஷனல் அவார்டு பட வாய்ப்பை, திறமைக்காக இன்னொருத்தருக்கு விட்டுக்கொடுத்த நம்ம கேப்டன் விஜயகாந்தின் பெருந்தன்மைக்கு ஒரு சல்யூட்!

  • 528
·
Added article

8 முறை தள்ளிப்போன ரிலீஸ், 9-வது முறை அஜித் செய்த அதிரடி செயல்; பிளாக்பஸ்டர் வெற்றியை டபுளாக கொடுத்த படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். நஅதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்து நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித், நடிப்பு மட்டும் இல்லாமல், விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று அசத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் அஜித், நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் ஒன்று பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் போனது. ஆனால் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற இந்த படம் மற்ற மொழிகளில் ரீமேக் ஆகி அங்கேயும் வெற்றியை பெற்றிருந்துது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். நஅதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்து நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித், நடிப்பு மட்டும் இல்லாமல், விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று அசத்தி வருகிறார். அவரது சினிமா கேரியரில் மிக முக்கிய திரைப்படங்களை பட்டியல் எடுத்தால் எடுத்தால் அதில் வரலாறு திரைப்படத்திற்கு முக்கிய இடம் இருக்கும். அஜித் முதல் முறையாக இந்த படத்தில் 3 வேடங்களில் நடித்திருந்தார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் அஜித்தின் திரை வாழ்க்கையை மாற்றியது. கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர் அஜித், அப்பா, மகன் என மூன்று கதாபாத்திரத்தில் நடித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியிருப்பார். இவருடன் இணைந்து அசின், கனிகா, மன்சூர் அலிகான், ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகர் அஜித் பரத நாட்டிய கலைஞராக நடித்து அசத்தியிருப்பார். அதிலும், அவர் ஆடும் பரத நாட்டியம் டான்ஸ் எல்லாம் அஜித் இப்படியெல்லாம் ஆடுவாரா என்று மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உபேந்திரா, கன்னடத்தில் வரலாறு ரீமேக்கில் நடித்திருப்பார். அங்கு ’காட்ஃபாதர்’ என்ற பெயரில் இந்த படம் உருவாகியது. கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதையில் சேது ஸ்ரீராம் இயக்கத்தில் இந்த படம் உருவாகியிருக்கும். அஜித் அளவிற்கு இல்லாவிட்டாலும் ஓரளவு உபேந்திரா இந்த படத்தில் நடித்திருப்பார். கன்னட ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 4.5 கோடி ரூபாயில் 7 கோடி வரை கன்னடத்தில் வசூலித்தது.

தமிழில் பெரிய வெற்றியை பெற்ற இந்த படம், ரிலீஸ் ஆவதில் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. 8 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது. கடைசியாக ஒரு தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான முயற்சிகள் நடந்தபோதும் ஒன்றும் நடக்கவில்லை. அப்போது அஜித்திடம் கேட்டபோது என்னிடம் பணம் இல்லை, நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் நான் ஒப்புக்கொள்கிறேன் என்று தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களிடம் கூறியுள்ளார்.

அதன்பிறகு எனது அடுத்த பட கால்ஷீட் யாரிடமும் கொடுக்கவில்லை. யாருக்கு கால்ஷீட் கொடுக்கிறேனோ அவரிடம் இந்த படத்திற்கான பணத்தை கழித்துக்கொள்கிறேன். வெளியில் கால்ஷீட் கொடுத்தாலும் அதில் கிடைக்கும் அட்வான்ஸை இதில் கழித்துக்கொள்ளலாம் எனறு கூறியுள்ளார் அஜித். அதன்பிறகு இரவு 12 மணியளவில் ஆனந்தா பிச்சர்ஸ் சுரேஷ் இதற்கு உதவி செய்தார். படம் ரிலீ்ஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதற்காக அந்த சுரேஷ்க்கு அஜித் கொடுத்த படம் தான் பில்லா.

  • 533