Feed Item
·
Added a post

ருமேனியாவில் பனியால் மூடப்பட்டிருந்த ஏரியில் தவறுதலாக விழுந்த 5 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்ற தனது உயிரையே பணயம் வைத்த இந்திய தொழிலாளி விபின் குமார் இன்று உலகத்தின் பாராட்டைப் பெற்றுள்ளார்..

பனிப்படலம் உடைந்து ஏற்பட்ட விபத்தில் நீரில் விழுந்த சிறுமியை காப்பாற்ற உடனடியாக ஓடிச் சென்ற அவர், மீட்புப் படையினர் வரும் வரை சுமார் அரை மணி நேரம் அந்த குழந்தையை நீரின் மேல் உயர்த்திப் பிடித்து உயிருடன் பாதுகாத்தார்..

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர் காட்டிய அந்த அசாதாரண தைரியத்தையே இன்று உலகம் முழுவதும் பாராட்டுகிறது..

இந்த மனிதநேயத்திற்கும் வீரத்திற்கும் அங்கீகாரமாக, ருமேனியாவின் Craiova நகரம் அவருக்கு “கௌரவ குடிமகன்” (Honorary Citizen) என்ற பெருமைமிக்க பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது..

வெளிநாட்டில் வாழ்ந்தாலும், ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தயக்கமின்றி முன்வந்த இந்தச் சம்பவம் மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் உயர்த்துகிறது..

விபின் குமார்....“மனிதநேயம் எல்லைகளை அறியாது; ஒரு உயிரைக் காப்பாற்றிய உங்கள் துணிச்சல் இந்தியாவின் பெருமை!

  • 39